என்றும் இளமையுடன்

இரண்டாயிரம் ஆண்டுகளாய்
எம் தமிழ்
இளமையாய்
இனிக்கிறது!

ஆயிரம் ஆண்டுகள்
ஆனபோதும்
ஆலின் இளமையை
இதயம் ஏற்கிறது!

பன்வருடம் பால் தரும்
பசுவைக் கூட
இளமையாய்
இதயம் ஏற்கிறது!

வைரம் பாய்ந்த
தேக்கின் வலிமை
இளமையென
இதயம் ஏற்கிறது!

ஆதவனும்
வெண்ணிலவும் கூட
ஒவ்வொரு நாளும்
புதிதாய் பூக்கிறது!

அன்னை தெரசாவும்
அண்ணல் காந்தியும்
அப்துல் கலாமும்
இளமைச் சின்னங்களே!

இளமை என்பது
ஆண்டுகளி்லில்லை!
ஆளும்
இதயத்திலுள்ளது!!

மயானம் வரை
'மகிழ்ச்சியுடன்
துடிக்கும் என்னிதயம்
இருக்கும் என்றும்
இளமையுடன்!!!!!!!.....

எழுதியவர் : இராம்குமார்.ப (30-Nov-19, 8:41 pm)
சேர்த்தது : இராம்குமார்
Tanglish : endrum yilamaiyudan
பார்வை : 122

மேலே