தேவை தெளிவு
மானம் காற்றில் பறக்கிறது என்பதை
வானூர்தியில் பயணித்து வெளியே பார்த்திட காணவில்லையாம் !
தரை இறங்கி சொன்னவர்களை தேடிப் பிடித்து
விசாரித்ததில் அவர்கள் சொன்னார்களாம்....
விமானத்தில் வெளியே இருந்து பார்த்தால் தான்
தெளிவாக தெரியுமாம் !
மானம் மேக கூட்டத்தில் காற்றாக கலந்ததை
இவர்கள் மறந்து போனது என்னவோ !
மானம் கப்பல் ஏறியதை இன்னும்
கேட்டறியவில்லை போலும் ........
காற்று பலவந்தமாக கடத்திவிட்டதோ !