அன்புக் கரம்
அன்புக்கரம் !
—-
அன்புக்கரம் ஒன்றே
அகிலத்தை ஆளும் /
ஆளும் தேசத்தில்
அகிம்சையே வாழும் /
வாழும் மாந்தர்க்கு
வரமாகும் பாசம் /
பாசம் உரமாகும்
பாருலகில் நேசம் /
நேசம் மெய்யானால்
நிலையாகும் இன்பம் /
இன்பம் வசமாகி
யாவர்க்கும் வாய்க்கும் /
வாய்க்கும் சமயங்களில்
உதவிடுவோம் தயங்காது /
தயங்காது முன்வந்தால்
நீண்டிடுமே அன்புக்கரம் !
-யாதுமறியான்.