நன்மதி வெண்பா - நூல் - பாடல் 86
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
மாவெந் திறலுள்ளேம் மண்டலத்தி யாமென்றே
யேவ ருடனும் இகல்கொள்ளேல் - தீவிடங்கால்
புற்றரவு நன்மதியே பூவுலகிற் பொன்றும்பல்
சிற்றெறும்பு மொய்க்கச் சிதைந்து! 86