இராம்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராம்குமார் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 17 |
தமிழார்வம் உதிரத்தில் கலந்தது... கணிணி வரைகலை நிபுணர். மதுரையிலிருந்து...
அன்பே உன்
கண்களைக் கண்டதும்
கணத்தில் மனம்
கனப்படுவதேன் - எதனால்?
மலரே உன் வாசமோ!
உன் சுவாச சீண்டலொ!
என் மெய் வருடும் கூந்தலோ!
முந்திரி மூக்கோ!
செங்காந்தள் செவியொ!
மல்லிகைகச் சிரிப்போ!
ரோஜா இதழோ!
அன்ன நடையோ!
சின்ன இடையோ!
சிட்டு விரல்களோ!
பட்டுப் பாதங்களோ!
மனமோ!
குணமோ!
உதிரத்தில் கலந்த
உணர்வோ!
என்னுள்ளம்
உனைத்தேடும்!
உறவில்லையெனில்
உயிர்மூடும்!
அன்பே!
உன் கண்களை
பரிசோதனை செய்து கொள்!!
அழகிருக்கும் அளவிற்கு
அவற்றில் திறனில்லை!!
என் அன்பின் வெளிப்பாடு
காதலை உணர்த்தாமல்
உன் பார்வையில்
காமத்தை உணர்த்துவதால்
அன்பே
உன் கண்களை
பரிசோதனை செய்து கொள்...
அன்பே!
உன் கண்களை
பரிசோதனை செய்து கொள்!!
அழகிருக்கும் அளவிற்கு
அவற்றில் திறனில்லை!!
என் அன்பின் வெளிப்பாடு
காதலை உணர்த்தாமல்
உன் பார்வையில்
காமத்தை உணர்த்துவதால்
அன்பே
உன் கண்களை
பரிசோதனை செய்து கொள்...
அன்பதனை அள்ளித்தருவதில்
அளவற்றிருப்பாய்!
அறிவூட்டும் ஆசானாய்
கண்டித்திருப்பாய்!
வேராய் நீ
மறைந்திருப்பாய்!
உயிராய் நீ
இருந்திருப்பாய்!
சிரிந்தால் சிந்தித்தால்
அழுதால் தவித்தால்
அனைத்திலும் நீயே
கலந்திருப்பாய்!
மகனாய் உமக்கு
கடனாற்றும் சமயம்
தகப்பனே எங்களைப்
பிரிந்தாய்! மறைந்தாய்!
நினைவாய்
நீ இருப்பாய்!
விதையாய் என்னுள்
புதைந்திருப்பாய்!
மகனாய் மகளாய்
பிறந்திருப்பாய்!
மறுபடியும் எங்களை
மகிழ்விப்பாய்!!
நித்தமும் உம்
நினைவில் இராம்...!
அன்பதனை அள்ளித்தருவதில்
அளவற்றிருப்பாய்!
அறிவூட்டும் ஆசானாய்
கண்டித்திருப்பாய்!
வேராய் நீ
மறைந்திருப்பாய்!
உயிராய் நீ
இருந்திருப்பாய்!
சிரிந்தால் சிந்தித்தால்
அழுதால் தவித்தால்
அனைத்திலும் நீயே
கலந்திருப்பாய்!
மகனாய் உமக்கு
கடனாற்றும் சமயம்
தகப்பனே எங்களைப்
பிரிந்தாய்! மறைந்தாய்!
நினைவாய்
நீ இருப்பாய்!
விதையாய் என்னுள்
புதைந்திருப்பாய்!
மகனாய் மகளாய்
பிறந்திருப்பாய்!
மறுபடியும் எங்களை
மகிழ்விப்பாய்!!
நித்தமும் உம்
நினைவில் இராம்...!
அஞ்சுகத்தாய் தந்த அழகு தமிழே!
ஆயிரம் பிறை கண்ட ஆல விருட்சமே!
இலக்கியத் தமிழால் இதயம் கவர்ந்தோரே!
ஈரேழு உலகம் போற்றும் செம்மொழியே!
உடன்பிறப்பென்று அன்பாய் அழைத்தவரே!
ஊரெல்லாம் கலையாய் கலைஞராய் வாழ்பவரே!
என்றும் மறவா, மறையா திட்டம் தந்தவரே!
ஏழை மக்களின் உள்ளுணர்வே!
ஐயமின்றி உன் உழைப்பை!
ஒளிரும் உதயசூரியனாய்!
ஓய்வின்றி உலகிற்களிக்கும்
ஔவைத் தமிழே!
இஃகணம்
ஆலம் விதையாய் உம்மை இப்புவி தாங்கும்…
நாளை விருட்சமாய் உந்தன் புகழ் முழங்கும்….
காரணமின்றி
கண்கள் பனிக்கும்
நிலவே
நெருஞ்சியாய்
என் நெஞ்சில்
உன் நினைவுகள்…
உதட்டிலிருப்பதல்ல
உள்ளத்திலிருப்பதே
உண்மையான
காதல்.....
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்
கண்டேன் என் முதல் காதலை...
கடந்து சென்றாள் என்னை..
கவனிக்காமல் சென்றாளா!
கவனிக்காதது மாதிரி சென்றாளோ?!
நெஞ்சம் கனத்தது...
கண்கள் பனித்தது..
சுகமாய் தெரிந்தது அன்று!
சுமையாய் ஆனது இன்று!