கலைஞர்
அஞ்சுகத்தாய் தந்த அழகு தமிழே!
ஆயிரம் பிறை கண்ட ஆல விருட்சமே!
இலக்கியத் தமிழால் இதயம் கவர்ந்தோரே!
ஈரேழு உலகம் போற்றும் செம்மொழியே!
உடன்பிறப்பென்று அன்பாய் அழைத்தவரே!
ஊரெல்லாம் கலையாய் கலைஞராய் வாழ்பவரே!
என்றும் மறவா, மறையா திட்டம் தந்தவரே!
ஏழை மக்களின் உள்ளுணர்வே!
ஐயமின்றி உன் உழைப்பை!
ஒளிரும் உதயசூரியனாய்!
ஓய்வின்றி உலகிற்களிக்கும்
ஔவைத் தமிழே!
இஃகணம்
ஆலம் விதையாய் உம்மை இப்புவி தாங்கும்…
நாளை விருட்சமாய் உந்தன் புகழ் முழங்கும்….