கிச்சாபாரதி - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : கிச்சாபாரதி | 
| இடம் | : சென்னை | 
| பிறந்த தேதி | : 17-Nov-1979 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 12-Jun-2010 | 
| பார்த்தவர்கள் | : 3834 | 
| புள்ளி | : 509 | 
ஒரு கிராமத்திலிருந்து சினிமாக்காரனாக வேண்டும் என்ற நோக்குடன் வந்த நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். சூழ்நிலையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளானேன். மருத்துவர்களின் சிறு தவறினால் பெரும் பாதிப்புக்குள்ளானேன்.ஓராண்டு காலம் படுக்கையில் மட்டுமே இருந்தேன். அதன் பின் தன்னம்பிக்கையுடன் மீண்டு(ம்) எழுந்து வந்தேன். கடந்த பத்து ஆண்டுகாலம் நான் பட்டபாடு வேறு யாரும் படக்கூடாது என்ற நோக்குடன் எழுதத் தொடங்கினேன். "தன்னம்பிக்கை எனும் தனல்" என்ற நம்பிக்கை புத்தகத்தை படைத்துள்ளேன். "எனக்குள் ஒரு தீ" என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன். தற்சமயம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மாற்றுத்திறனாளியாக இருக்கின்ற என்னை விரும்பும் ஒரு பெண்ணினை என்னுயிர் துணையாக இணைத்துக் கொள்ள ஆவல். சாதி மதம் கடந்து வாழ நினைக்கும் ஒரு தேவதையை தேடிக்கொண்டு இருக்கிறேன்.
பூவை விற்கும் பூவைக்கு
ஒரு பூவின் மணம்
தெரியாமல் இருக்குமா?
நன்கு தெரிந்திருந்தும்.....
இளம் பாவை
ஒரு பூவை
தலையில் சூட 
வழியில்லை!
காரணம்
அந்தப் பாவை
பூவை விற்கும் விதவை!
அவளது வாழ்க்கை
எவ்வளவு பெரிய கொடுமை?!
இன்று வந்த 
கொரோனா 
கொடிதா?
அன்று முதல்
இன்றுவரை
தொடரும்...
வறுமை
கொடிதா?
முதலில் 
எதை ஒழிக்க வேண்டும்?
வறுமையையா?
கொரானா வைரஸ்யா?
நல்ல தலைவனை தேர்ந்தெடுத்திருந்தால்
வறுமை இங்கு இல்லாதிருக்கும்
மடியேறி ஆடிய மகனின் முன்னே 
   படகேறி வந்த பாம்பொன்று ஆட 
  பதறிய தாயின் கால்களைக் கொத்திக் 
   கருவறைக் குள்ளே சென்றது பாம்பு 
  கதறிய குழந்தையின் வாயினைப் பொத்திச் 
  செவிலித்  தாயின் கரங்களில் சேர்த்தாள் 
  சிதறிய கண்ணீர் கடலாய் மாறி 
  கவலை நதியில் சேர்வதைப் பார்த்தாள் 
  தாயுடல் இன்று நோயினில் வாட 
  சேய்மனம் நாளும் தாயினைத் தேட 
   சேர்ந்திட இங்கொரு வழியும் இல்லை 
   கண்ணீரைத் தாண்டிய மொழியும் இல்லை!!
நடக்கின்ற பாதை
கடினமாக இருக்கே
என்று நினைத்து
நீ நடப்பதற்கு
முயற்சி செய்யாமல் 
முடங்கி இருந்தால்
காலம் உன்னை விட்டு 
கடந்து சென்று விடும்...!!
துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை பாதையில்
தொடர்ந்து பயணம்
செய்தால்தான்
பாதையும் தெரியும் 
சுகமான வாழ்க்கையை
சுவைக்கவும் முடியும்...!!
முட்கள் நிறைந்த
பலாப்பழத்திற்குள்
புதைந்து இருக்கும்
இனிப்பான 
பலாச்சுளைப் போல்தான்
மனிதனின் வாழ்க்கை...!!
---கோவை சுபா
செந்தமிழ் மொழியாள் ..
------------------
செந்தமிழ் மொழியாள் செழுமையின் வழியாள் /
எந்தனின் உயிரினில் இனிதே கலந்தாள் /
எங்கோ பிறந்தாள் இதயம் புகுந்தாள் /
தங்கம் வைரமாய் தாரணி சிறந்தாள் /
விழிகள் நான்கிலும் விளங்கிடும் ஒன்றே /
பழிகள் இல்லா பாவையின் அன்பிலே /
நல்லறம் காணவே நாமும் இணைந்தோம் /
இல்லறம் என்பதே இனியவள் உறவே /
பற்றியக் கரங்களை விடுவதும் இல்லை/
முற்றிய அன்பு முறிவதும் இல்லையே  /
-யாதுமறியான்.
இன்று வந்த 
கொரோனா 
கொடிதா?
அன்று முதல்
இன்றுவரை
தொடரும்...
வறுமை
கொடிதா?
முதலில் 
எதை ஒழிக்க வேண்டும்?
வறுமையையா?
கொரானா வைரஸ்யா?
நல்ல தலைவனை தேர்ந்தெடுத்திருந்தால்
வறுமை இங்கு இல்லாதிருக்கும்
காலம் காலமாய்
சாதியும், மதமும்
மனிதன் பின்னால்
தொடர்ந்து வருவதேன்?
ஓ!
இதுவொரு
தொற்றுவியாதியோ?
இதைத் தடுக்க 
இதுவரை ஏதும்
மருந்து இல்லையோ?
உண்டெனில்...
இனியும் ஏன்?
மனிதனுக்குள்!
ஓ!
அரசியல்வாதிகள்
இருக்கும்வரை
இது அழியாது போலும்...!
என் அக்காவோ
என்னை மருமகனாக்க 
விரும்புகிறார்.....!
என்னால்...
என் மருமகளை
மனைவியாக்க முடியாது
உன் விழிப்போரும், மொழிப்போரும் 
பயன்படவில்லை என்றா 
மௌனப்போர் புரிகின்றாய்..!!
உன் பிரிவு என்னை பாதிக்கிறது..!! 
நேற்றுவரை சரியாத என் மனதை
இன்று உன் மௌனம் சாதிக்கிறது..!!
பீரு கொண்டு திரியும் - இளைஞர்  கூட்டம்
எங்கள்  தேசத்தில்
வீறு கொண்டு நடைபோட
ஏழுவது எப்போழுது ?
எண்ணற்ற  சட்டங்கள்  உள்ள 
எங்கள்  தேசத்தில்      
எண்ணற்ற குற்றங்கள் நிகழாமல்
தடுப்பது எப்பொழுது ?
பெண்களை  தெய்வமாக  பார்க்கும் 
எங்கள்  தேசத்தில் 
பெண்கள் உயிர்க்கு  பாதுகாப்பு
கிடைப்பது  எப்பொழுது ?
மருத்துவத்தை வியாபாரமாக  பார்க்கும் 
எங்கள்  தேசத்தில் 
மருத்துவத்தை  உயிர்  சேவையை  
செய்வது  எப்பொழுது ?
விஞ்ஞானத்தை  சாதனையை  பார்க்கும்   எங்கள்   தேசத்தில் 
விவசாய  நிலைமையை  இனியாவது
எண்ணுவது எப்போழுது ?
நாறிப்போன எங்கள்  தேசம் 
தேறப்போவது எப்போழுது ?
நாடித்தளரும் ம
நான் உணர்ந்ததெல்லாம் உண்மையான
காதலே அன்றி
வெறும் பித்து பிடித்து
அலையும் காமத்தினால் அல்ல
அதனாலோ என்னவோ உன்னுடன்
உரையாடும் தருணங்கள் அனைத்தும்
என் வாழ்வின் ரணங்களாகி போகவே
நம்முடைய காதல் என்ற 
ஒன்று பிறவாமலே
இறந்ததும் தான்
அடங்காத வேதனையடி
 
                     
 
					 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    