பாதை தெரியுது பார்

நடக்கின்ற பாதை
கடினமாக இருக்கே
என்று நினைத்து
நீ நடப்பதற்கு
முயற்சி செய்யாமல்
முடங்கி இருந்தால்
காலம் உன்னை விட்டு
கடந்து சென்று விடும்...!!

துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை பாதையில்
தொடர்ந்து பயணம்
செய்தால்தான்
பாதையும் தெரியும்
சுகமான வாழ்க்கையை
சுவைக்கவும் முடியும்...!!

முட்கள் நிறைந்த
பலாப்பழத்திற்குள்
புதைந்து இருக்கும்
இனிப்பான
பலாச்சுளைப் போல்தான்
மனிதனின் வாழ்க்கை...!!
---கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Aug-22, 6:40 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 325

மேலே