உயிரைத் தேடும் உடல்
மடியேறி ஆடிய மகனின் முன்னே
படகேறி வந்த பாம்பொன்று ஆட
பதறிய தாயின் கால்களைக் கொத்திக்
கருவறைக் குள்ளே சென்றது பாம்பு
கதறிய குழந்தையின் வாயினைப் பொத்திச்
செவிலித் தாயின் கரங்களில் சேர்த்தாள்
சிதறிய கண்ணீர் கடலாய் மாறி
கவலை நதியில் சேர்வதைப் பார்த்தாள்
தாயுடல் இன்று நோயினில் வாட
சேய்மனம் நாளும் தாயினைத் தேட
சேர்ந்திட இங்கொரு வழியும் இல்லை
கண்ணீரைத் தாண்டிய மொழியும் இல்லை!!