ஜீவா நாராயணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜீவா நாராயணன் |
இடம் | : Cuddalore |
பிறந்த தேதி | : 27-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 15 |
அடர்ந்த காடு
எனக்கான வாய்த்த காட்டில்
அதிகாரி வேலை
தனிமையான இரவில் மெழுகுவர்த்தி ஒளியில்
அடர்ந்த காட்டை மனதில்
அசைபோடுகிறேன்
விண்ணை முட்டும்
மரங்கள்
தேன்நிரம்பி வழியும்
பூக்கள்
நிசப்தத்தை உடைக்கும்
பறவையினொலிகள்
பயமுறுத்தும் மிருகங்கள் வரைஅனைத்துக்கும்
அடைக்கலம் கொடுத்த காடு
எனக்கும் அடைக்கலம்
கொடுத்தது
இராமற்போன வனவாசம் போல்
அதிகாரி வேடத்தில் நானும்
போனானேன் காட்டுவாசம்
ஒளிகூட ஊடுருவ சிரமப்படும்
அடர்ந்த காடு
மங்கை கொலுசொலி போல்
சத்தம்போடும் அருவிகள்
பறவை குரல் கேட்டு
குழந்தையைப்போல தலையாட்டும்
காதலியின்நினைவு குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு காதலனின் நாட்குறிப்பு
கவிதைகளின் குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு கவிஞனின் நாட்குறிப்பு
மருத்துவ குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு நோயாளியின் நாட்குறிப்பு
வரவுசெலவு குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு வியாபாரியின் நாட்குறிப்பு
அனுபவங்களின் குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு போராளியின் நாட்குறிப்பு
இயற்கையின்பருவநிலை குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு விவசாயின் நாட்குறிப்பு
நாளையென்ற நம்பிக்கை குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு சாமானியனின் நாட்குறிப்பு
ஜீவா நாராயணன்
9600579929
தாஜ்மகால் தனி மனிதனின்
சுயநல வெளிப்பாடு
கல்லணை காலத்தை வென்றுநிற்கும்
பொதுநல வெளிப்பாடு.
ஜீவா நாராயணன்
9600579929
மழையை
பொழிய பிடிக்குமாம்
நனைய பிடிக்காதாம்
கவிதையை
படிக்க பிடிக்குமாம்
ரசிக்க பிடிக்காதாம்
இயற்கையை
வியக்க பிடிக்குமாம்
காக்க பிடிக்காதாம்
பொதுநலமாய்
வாழ்பவர்களை பிடிக்குமாம்
வாழ்வதற்கு பிடிக்காதாம்
உண்மையை
கேட்க பிடிக்குமாம்
பேச பிடிக்காதாம்
ஜீவா நாராயணன்
9600579929
அழகாய் வலம் வரும் முழுநிலவு என்னை
சுற்றிதான் எத்தனை நட்சத்திரக் கூட்டம் !
நானும் தினம் நாணித்தான் செல்கிறேன்
எனக்கேற்ற ஒருவனை (சூரியனை)
தேர்ந்தெடுத்து கைப்பிடிப்பதற்குள்
தாண்டத்தான் வேண்டும்
பல மேடு பள்ளங்களை...
என் நிழலாய் பின் தொடர்ந்து வரும்
அவன்களையெல்லாம் என் கணவனாக
கருதிட முடியுமா? தமிழ் பெண் மனம் !
ஒரு வானுக்கு ஓர் நிலவுதான்
ஒரு ஆணுக்கோர் பெண்தான்
இல்லையேல் வாழ்க்கை நரகம்தான்!