அடர்ந்த காடு

அடர்ந்த காடு

எனக்கான  வாய்த்த காட்டில்  
அதிகாரி  வேலை
தனிமையான  இரவில்  மெழுகுவர்த்தி  ஒளியில் 
அடர்ந்த  காட்டை  மனதில்
அசைபோடுகிறேன்

விண்ணை  முட்டும் 
மரங்கள்
தேன்நிரம்பி வழியும்
பூக்கள்
நிசப்தத்தை  உடைக்கும் 
பறவையினொலிகள்
பயமுறுத்தும்   மிருகங்கள் வரைஅனைத்துக்கும்
அடைக்கலம்  கொடுத்த  காடு

எனக்கும்  அடைக்கலம் 
கொடுத்தது
 
இராமற்போன   வனவாசம்  போல்
அதிகாரி  வேடத்தில்  நானும் 
போனானேன்  காட்டுவாசம்

ஒளிகூட  ஊடுருவ  சிரமப்படும் 
அடர்ந்த  காடு
மங்கை  கொலுசொலி  போல் 
சத்தம்போடும்  அருவிகள் 

பறவை  குரல்  கேட்டு
குழந்தையைப்போல  தலையாட்டும்  மரங்கள்
உதிர்ந்த இலை கூட
பஞ்சு   மெத்தையாக  மாறிப்போன  பாதை

நாட்களின்  முதுகில் 
தேதி  இல்லை 
எத்தனை  நாட்கள் 
கழிந்தன என்ற 
அக்கறையும் இல்லை

இதை  ஆதிவாசி 
வாழ்கை  என்று  சிரிப்போரிடத்தில்
இது  இயற்கையோட இணைந்த 
வாழ்க்கை  என்று  பெருமைகொள்கிறேன்

தனிமையில்  முடிவில்லாமல் 
நீண்டு கொண்டிருந்த 
இரவை  மெழுகுவர்த்திகள்
அணைத்து காண்பிக்கின்றது

எழுதியவர் : ஜீவா நாராயணன் (1-Mar-18, 9:45 pm)
சேர்த்தது : ஜீவா நாராயணன்
பார்வை : 241

மேலே