தூக்கணாங் குருவி

நதியோரத்தில் குட்டை பனை
அதன் ஓலைகளில் தொங்கும்
தூக்கணாங் குருவி கூடு
தொங்கும் கூடுகளில் கொஞ்சி
விளையாடும் ஜோடிக் குருவி
தன குஞ்சுகளுக்கு வேய்கின்றனவா
பக்கத்தில் இன்னும் ஒரு கூடு
அதைப் பார்த்து ரசித்தப் பின்னே
புதிய பாடமும் கற்றானோ அங்கு
மரத்தின் கீழே பிரம்பில் பாய்
முடையும் அந்த தொழிலாளி
மனிதனுக்கும் கற்று தருகிறது
ஓர் பாடம் இந்த சின்னஞ்சிறு
சிட்டுப்பறவை அதுதான் நைதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Mar-18, 9:11 am)
பார்வை : 240

மேலே