இலையுதிர்க் காலத்தில் இப்படி ஒரு காட்சி

நேற்று பார்க்கையில்
இலைகளெல்லாம் காணாமல்
பட்டமரம்போல் நின்ற மரம்
இப்படி பச்சையாய் மாறியது
விந்தையே என்று நினைத்து
சற்று அருகில் சென்றேன்
அந்த அரவத்தில் மரத்தை விட்டு
வானை நோக்கி எழுந்தன
ஆயிரம் பச்சை கிளிகள்
மீண்டும் இலைகளற்று நின்றது மரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Mar-18, 9:23 am)
பார்வை : 158

மேலே