சமூக முரண்பாடுகள்
மழையை
பொழிய பிடிக்குமாம்
நனைய பிடிக்காதாம்
கவிதையை
படிக்க பிடிக்குமாம்
ரசிக்க பிடிக்காதாம்
இயற்கையை
வியக்க பிடிக்குமாம்
காக்க பிடிக்காதாம்
பொதுநலமாய்
வாழ்பவர்களை பிடிக்குமாம்
வாழ்வதற்கு பிடிக்காதாம்
உண்மையை
கேட்க பிடிக்குமாம்
பேச பிடிக்காதாம்
ஜீவா நாராயணன்
9600579929