இப்படியும் ஒரு பேத்தல்
கிறிஸ்து பிறப்பதற்கு முன்புள்ள காலத்தை கிமு என்று சொல்கிறோம். கிறிஸ்து பிறந்தபின் உள்ள காலத்தை கிபி என்று சொல்கிறோம். அப்படி என்றால் கிறிஸ்து இறந்தபின் நடக்கும் காலத்தை கிஇபி (கிறிஸ்து இறந்தபின்) என்றுதானே அழைக்கவேண்டும்.
இலங்கை என்று பேர் இருந்தபோது அதன் தலைநகர் கொழும்பு. அதன் பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றியபின் அதன் தலைநகர் பெயர் கொழுப்பு என்றுதானே இருக்கவேண்டும்?
வாகனங்களை அதிவேகமாக ஓட்டினால் அபராதம் கட்டவேண்டும். வாகனங்களை மெதுவாக ஓட்டினால், மெதுவாக ஒட்டுகிறவர்களுக்கு சலுகை ஏதாவது கிடைக்கவேண்டும் அல்லவா?
வார நாட்கள்ல வெளியே போனா, அப்படி ஒரு டிராபிக். சரி சனி கிழமை வெளியே போவோம்னா, மத்த நாட்களை விட டிராபிக் அதிகமாகவே இருக்கு. அப்போ மிச்சம் இருப்பது ஞாயிறு மட்டுமே. அதனால ஞாயிறு வெளியே கிளம்பி போலாம்னு பிளான் பண்ணபோதுதான் தெரியுது எல்லோருமே இதேபோல நினைச்சுகிட்டு இருக்காங்க. அப்புறம் என்ன, மத்த எல்லா நாட்களையும் விட ஞாயிறு அன்னிக்குத்தான் ரோட்டுல அதிகமாக டிராபிக் இருக்குது. பேசாம ஏதாவது ஒரு தூரத்து கிராமத்துக்கு போய்டலாம்னு பார்க்கிறேன். ஆனால், வண்டில கிராமத்துக்கு எப்படி போறது? போற வழி, ஊரெல்லாம் எங்க பாத்தாலும் டிராபிக். சிட்டி வாழ்க்கையே பெட்டெர் போல இருக்கு.