பாசறை

பாசறை


பேரூந்தோடு ஒரு வழி பயணித்த
நாவலிலைகளின் கண்ணீர் சிறுதுளிகள்
பாதி வழியிலே சிதைந்ததைக்கண்ட
ஒட்டி உறவாடிய உறவுகள்
இரத்த பாசறை மவுசு இழக்கவே
இயற்கை இதிகாசத்தை புரட்டி போட்டது
முற்றுப்பேறா தொடர்கதை கதாபாத்திரங்கள்
உடன் உலாவர ...

கோரப்படாத தோரணைகளை
அறப்பணி மீட்டிங்கு
இறுதி மரியாதை செலுத்திட
தொப்புள் கொடி உறவுகள்
கலியுக நாவலின் கருப்பொருளின் மெய்யுணர்தலை
பின் நோக்கு உத்தி வெற்றுத்தாள் விலைக்கு வாங்கியது ..
அறுபட்ட உயிலை !

மாயான சூடு தனியவே
உயிரை மதியா பந்தங்கள்
இருவழி மூச்சடைப்பின் இலக்கியத்தை
காலம் தவறி செவிமடுக்க !
வழக்கம் போல் கிறுக்கிவைத்தான்
கருப்புச்சட்டை வழிப்போக்க வக்கீழ்
வசூலை வாங்கிக் கொண்டு !

எழுதியவர் : தருமராசு (11-Jul-16, 4:46 pm)
பார்வை : 80

மேலே