கிள்ளி கொடு
கிள்ளி கொடு
வருமான வரி
வாயபிளந்து பார்க்க
அவகாசம் கேட்டதை
நிராகரித்த ஆளுநர்
காலம் தாழ்த்தாதே
காலன் உன்னை
வசப்படுத்த வீசிய வலை
உன்னை விருந்தினர்
பட்டியலில் வரவேற்பு
மண்டபத்தில்
காத்திருக்கிறது !
தேவைக்கு வேண்டியதை
எடுத்து செலவு செய்ய
வீட்டு கணக்காயர்
விடுப்பில் போகவில்லையே !
பீரோவை பாத்துக்க
ஹீரோ வீட்டு
மாம்பிள்ளையாக அல்லவா
வலம் வருகிறார் !
அள்ளி செலவழிக்க
வேண்டிட அவசியம் இல்லா
தருணம்
கிள்ளி கொடுத்தாலும்
உன்னை போற்றும்
உன் குடியில்
தேயும் கூலிப்படை !
இந்த
வசதி வாய்ப்பை வரவில் வைக்கவா!
இல்லை
வருமானவரி பீரோவை
திறந்து வைக்கவா !