நம்பிக்கை ஆகிறது

நம்பிக்கை ஆகிறது.
08 / 04 / 2025
ஒரு லக்குவனன் இல்லையென்றால்
தம்பியின் அருமை
அறியமுடியாமல் போயிருக்கும்
ஒரு பரதன் இல்லையென்றால்
தியாகத்தையும் மரியாதையையும்
உலகம் அறியாது போயிருக்கும்
ஒரு அனுமன் இல்லையென்றால்
தூதுக்கும் தெய்வ நம்பிக்கைக்கும்
உதாரணம் இல்லாமல் போயிருக்கும்
ஒரு ராவணன் இல்லையென்றால்
ராமனின் அவதாரம்
முழுமை அடையாமல் போயிருக்கும்
ஒரு சீதை இல்லையென்றால்
ராமாயணம் கிடைக்காமல் போயிருக்கும்
மனிதா..
நீ வணக்கவில்லையென்றால்
தெய்வம் என்று ஒன்றேது?
தெய்வம் என்று ஒன்றில்லையென்றால்
மனிதா உன் வாழ்வென்று ஒன்றேது?
ஒரு மனித சக்தி இல்லையென்றால்
தெய்வசக்தி கொண்டாடப் படமுடியாது.
ஆக
ஒன்றுக்கொன்று ஆதார ஸ்ருதிதான்.
உன் நம்பிக்கைதான்
இங்கு தெய்வமாகிறது
அந்த தெய்வம்தான் உன்வாழ்வின்
நம்பிக்கை ஆகிறது.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (8-Apr-25, 9:18 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : nambikkai aagirathu
பார்வை : 40

மேலே