வாழ்க்கை

அழகாய் வலம் வரும் முழுநிலவு என்னை
சுற்றிதான் எத்தனை நட்சத்திரக் கூட்டம் !

நானும் தினம் நாணித்தான் செல்கிறேன்
எனக்கேற்ற ஒருவனை (சூரியனை)
தேர்ந்தெடுத்து கைப்பிடிப்பதற்குள்
தாண்டத்தான் வேண்டும்
பல மேடு பள்ளங்களை...

என் நிழலாய் பின் தொடர்ந்து வரும்
அவன்களையெல்லாம் என் கணவனாக
கருதிட முடியுமா? தமிழ் பெண் மனம் !

ஒரு வானுக்கு ஓர் நிலவுதான்
ஒரு ஆணுக்கோர் பெண்தான்
இல்லையேல் வாழ்க்கை நரகம்தான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (10-Jul-16, 9:51 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 133

மேலே