ஏங்கித்தவித்தபடி

இதோ இந்த
தெருக்கள் எங்கும்
நீ
விட்டு சென்ற
காற்தடங்கள்
மீதமிருக்கிறது!
நான்
சுவாசிக்கும்
காற்றில் கூட
உன்
வாசம்
ஒட்டியிருக்கிறது!
இங்கேதான்
நானும் நீயும்
ஒற்றை
தேனீரோடு
அமர்ந்தபடி
மழையை ரசித்தோம்.
மீண்டும் மழை.
அதே மண்வாசம்.
உன்
நினைவுகளை
மீட்டெடுக்கிறது!
உனக்கு
நினைவிருக்கிறதா?
சாலைக்கு
அந்த பக்கம்
உயர்ந்து வளர்ந்த
மரத்தின்
கிளைகளை
எட்டி பிடிக்க
முயன்று தோற்றபோது
தூக்கி அணைத்து
உயரம் சேர்த்தாயே!
ஒற்றை நொடியில்
விண்ணை தொட்டதாய்
ஆனந்தமாய்
கிளைகள் பற்றி ஒடித்தபோது
பூக்களால்
நனைந்தோமே!
அந்த மரத்தின்
முறிந்த கிளைகள்
சாபமிட்டிருக்குமோ?
ஏளனமாய்
சிரித்தபடி
இம்சிக்கிறது!
உன்னிடம்
திருடிய
உன் மேற்சட்டை
போர்த்து
உறங்க
போதுமானது
என்பாயே!
இன்னும்
உன்னை போல
என்னை முறைத்தபடி
என் வீட்டு
அலமாரியில் அடைந்து
கிடக்கிறது!
பார்க்கும்போதெல்லாம்
பரவசமாய் என்னை
பதட்டப்படுத்துகிறது!
உன்னுடனான
எல்லாமே
அதே உயிர்ப்புடன்
என்னுடன்
பத்திரமாய்
இருக்கிறது!
என்றேனும்
நீ
வருவாய்
என
என்னை போலவே
ஏங்கித்தவித்தபடி!!!!

எழுதியவர் : shanju (10-Jul-16, 9:08 pm)
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே