நினைப்பதற்கோர் வலி

குளிர் தேசமொன்றின்
பனிபடர் இரவின்
முழுநிலா
பொழுதொன்றில்!
உன்
கைகளுக்குள்
விருப்பமாய்
அடங்கி
நெஞ்சுக்கூட்டின்
சப்த அலைவரிசைகளின்
சங்கீதம்
ரசித்தபடி!
மார்புக்குள்
முகம் புதைத்து!
கண்கள்
மயங்கியா?
மூடியா?
தெரியவில்லை!
மோகநிலையோ
யோகநிலையோ
ஏதோ ஒன்றின்
உச்ச நிலை!
அந்த
நொடி
கேட்டிருந்தால்
அதுதான்
சொர்க்கம்
என்றிருப்பேன்!
இல்லையெனில்
மகிழ்ச்சி
நிம்மதி
அதிஷ்டம்
பாதுகாப்பின்
உச்ச நிலை
இப்படி
அத்தனைக்கும்
அந்த நிமிடம்தான்
அர்த்தம்
என்றிருப்பேன்!
நெற்றி
மறைத்த
கூந்தல்
விலக்கி
நீ
உதடு பதிக்கையில்
உலகமே
என்னிடம்
அடிமைப்பட்டுபோனதாய்
இறுமாந்த
தருணம் அது!
சின்ன
சில்மிசங்களும்
உதடு
வலித்த
முத்தங்களுமாய்
நீண்ட
அந்த இரவு!
நிறைய
பெற்றதுவும்
பகிர்ந்ததுவும்
அந்த
பொழுதில்தான்!
அன்று
நான்
அறியவில்லை!
இனி
வாழப்போகும்
அத்தனை
நாட்களும்
உன்னை
நினைத்து
உருகி
உடைந்து
உயிர்
கரையும்
பொழுதுகளுக்கு
காரணமாகிப்போகும்
நாளதன்று!

எழுதியவர் : shanju (10-Jul-16, 8:23 pm)
பார்வை : 65

மேலே