வெண்பா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வெண்பா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 2 |
ஆதியில் தோன்றிய அகிலமும் எங்கே?
பாதியில் மாறிய பருவமும் இங்கே
பாவம் சுழலும் கலியுகம் இங்கே
காத்திடும் கடவுளும் தரணியில் எங்கே?
ஆட்சிபுரிகின்ற அரசன் இங்கு உண்டு
அரியணை அமர்ந்திட ஆடவர் உண்டு
ஏனோ நாடிய அமரன் இங்கில்லை
நீதியும் உண்மையும் போனது எங்கே...?
அன்னையாய்ப் போற்றிய பெண்மகள் இங்கே
பதுமையாய் வாழ்ந்திடும் பேரிளம் பிள்ளை
கனவுகளோடு ஆடிய செல்வம்
கள்வர்களால் நேர்ந்த கொடுமைகள் ஏனோ?
சொல்ல வியலா கொடூரம் இதனை
கேட்பா ரின்றிப் புதைந்தது மண்ணில்
விண்ணில் நிகழ்த்திய சாதனை உண்டு
வீரனில்லாதொரு சோதனையும் உண்டு
தட்டிக் கேட்டிடச் சட்டம் இங்கில்லை
தட்டிக் கொடுத்திடும் கூட்டமும் இங்கே
பாற்கடல
ஆதியில் தோன்றிய அகிலமும் எங்கே?
பாதியில் மாறிய பருவமும் இங்கே
பாவம் சுழலும் கலியுகம் இங்கே
காத்திடும் கடவுளும் தரணியில் எங்கே?
ஆட்சிபுரிகின்ற அரசன் இங்கு உண்டு
அரியணை அமர்ந்திட ஆடவர் உண்டு
ஏனோ நாடிய அமரன் இங்கில்லை
நீதியும் உண்மையும் போனது எங்கே...?
அன்னையாய்ப் போற்றிய பெண்மகள் இங்கே
பதுமையாய் வாழ்ந்திடும் பேரிளம் பிள்ளை
கனவுகளோடு ஆடிய செல்வம்
கள்வர்களால் நேர்ந்த கொடுமைகள் ஏனோ?
சொல்ல வியலா கொடூரம் இதனை
கேட்பா ரின்றிப் புதைந்தது மண்ணில்
விண்ணில் நிகழ்த்திய சாதனை உண்டு
வீரனில்லாதொரு சோதனையும் உண்டு
தட்டிக் கேட்டிடச் சட்டம் இங்கில்லை
தட்டிக் கொடுத்திடும் கூட்டமும் இங்கே
பாற்கடல
வணக்கம்
ஊடகம் ..
இந்த ஊடகம் என்றால் என்ன ?
இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன?
பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன?
இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள்.
இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .?
ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல
பொறுப்பான துறையும் தான் .
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை
சிரிக்கவோ சிந்திக்கவோ
வைத்த படி தான் நகர்கிறது .
நீங்கள் தான்
சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து
சிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .
உலகம் ஒரு மாயை என்றான்
உயர் வெல்லாம் உள்ளமே என்றான்
உண்மைதான் பெரும் பொய் என்றான்
ஊமையை சிறந்த மொழி என்றான்
பட்ட மெல்லாம் பகட்டு என்றான்
பணி வென்பதே அறிவு என்றான்
ஞானம் ஞாலம் கடந்தது என்றான்
மானம் அவரவர் ஏற்பு என்றான்
துன்பம் என்பது வரவு என்றான்
இன்பம் அதுவொரு போதை என்றான்
இனி வருவது நாளை என்றான்
இது சொன்னால் பித்தன் என்றான்…!
-வெண்பா
உலகம் ஒரு மாயை என்றான்
உயர் வெல்லாம் உள்ளமே என்றான்
உண்மைதான் பெரும் பொய் என்றான்
ஊமையை சிறந்த மொழி என்றான்
பட்ட மெல்லாம் பகட்டு என்றான்
பணி வென்பதே அறிவு என்றான்
ஞானம் ஞாலம் கடந்தது என்றான்
மானம் அவரவர் ஏற்பு என்றான்
துன்பம் என்பது வரவு என்றான்
இன்பம் அதுவொரு போதை என்றான்
இனி வருவது நாளை என்றான்
இது சொன்னால் பித்தன் என்றான்…!
-வெண்பா