Princess Hasini - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Princess Hasini
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2018
பார்த்தவர்கள்:  375
புள்ளி:  33

என்னைப் பற்றி...

இந்த சமுதாயத்தில் நல்ல எண்ணங்களை விதைத்து நல்லவைகளை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நோக்கம். பூமி புதிதாக வேண்டும் மனித இனம் மகிழ்ச்சியான உள்ளம் கொண்டவர்களாக வாழ வேண்டும். அன்புதான் இந்த பூமியை ஆள வேண்டும். அதுவே என்னுடைய வேண்டுதல்.

என் படைப்புகள்
Princess Hasini செய்திகள்
priya அளித்த படைப்பில் (public) umarsheriff மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Dec-2018 9:48 am

என்னை ஆச்சரியமாக பார்ப்பவர்களுக்கு ஓர் விளக்கம்....
ஆம்!.எனக்கு விவாகமும் ஆகிவிட்டது...விவாகரத்தும் ஆகிவிட்டது...இதை கூற எனக்கு எவ்வித ஐய்யபாடும் தோன்றயதில்லை.
இங்கு அதிசயமும் , ஆச்சர்யமும் கொள்ளுமளவு ஏதும் நிகழ்ந்திருக்கவில்லையே..
எவரொருவர் விலக்குவதற்க்கு முன்பே விலகி இருப்பது எவ்வளவு உத்தமமோ அதே போல் விளக்கம் கேட்பதற்கு முன்னமே விளக்குவதும் நன்றே...
பொய்யுரைத்து ஓடி ஒளிந்து கொள்வதை காட்டிலும் மெய்யுரைத்து நேரெதிரிலே நிற்பதிலே எனக்கோர் அகமகிழ்வு..... எவரின் பரிதாப விருந்தையும் இவள் ஏற்பதில்லை......
என்னை பற்றிய தவறான புரிதலுக்கு நான் பொறுப்பல்லவே...

மேலும்

புரட்சி சிறப்பு...மகிழ்ச்சி.! 16-Jan-2019 9:48 am
நன்றி சகோதரி... 26-Dec-2018 6:23 pm
சகோதரி பிரியா! வாழ்கிறேன் என்ற போர்வைக்குள்ளே சிலர் வாழாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், நான் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு யாருக்கும் மனத் தைரியம் இல்லை. உங்களின் துணிவு போற்றுதற்கு உரியது.துணையில்லாமல் வாழலாம், துணிவில்லாமல் வாழ்வது கோழைத்தனம். Salute பிரியா. Go ahead . 26-Dec-2018 6:12 pm
Princess Hasini - priya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2018 3:08 pm

வாழ்வின் முதல் தேவதை இவள்...

அடங்கி போகிறேன் உன் அதட்டலில்...
உன் ஒற்றை புன்னகையில் பட்டுத்தேய்ந்தது அத்துனை வலிகளும்....
மொழியறியா பரிபாஷைகள் உனக்கும் எனக்கும்...

மேலும்

மிக்க நன்றி சகோதரி.. 26-Dec-2018 8:27 am
அருமை சகோதரி. 24-Dec-2018 5:43 pm
அருமை, அருமை சகோதரி ப்ரியா மழலை மொழியும் புன்னகையும் இறைவனை தன்னுள் கொண்டதல்லவா 24-Dec-2018 7:34 am
புன்னகை இனிமை 23-Dec-2018 11:06 pm

கனகாம்பரம் டிசம்பர் மற்றும் வாடாமல்லி
வாசமில்லா அழகு மலர்கள் இவை
குணமில்லா அழகு மங்கையர்போல் ;
தடாக நீரின் மேல் உயர்ந்து பூக்கும்
தாமரை , பேரழகுப்பூ சுகம்தரும்
இன்பமணமும் இதிலுண்டு தேவரும்

மேலும்

மிக்க நன்றி நண்பர் கவின் சாரலன் 24-Dec-2018 8:35 pm
மலர்களுக்குத் தந்த உவமைகள் சிறப்பு. அருமை நட்பே. 24-Dec-2018 5:33 pm
இயற்கையோடு அமைந்த வரிகள் அருமை... 24-Dec-2018 11:54 am
Princess Hasini - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2018 10:39 pm

கவிஞன் என்பவன் ஓர்
காலக் கண்ணாடி
கருப்படு பொருளை
உருப்பட வைப்பவன்
கலங்கா உள்ளம் கொண்ட
கலங்கரை விளக்கு அவன்
ஆக்கல் அழித்தல் காத்தல்
அனைத்தையும் அறிந்தவன்
நிதர்சனத்தின் உண்மைதனை
நீக்கமற உரைப்பவன்
மிகையோ குறையோ
கிஞ்சித்தும் இல்லை
சாளரத்தின் காதுகளுக்கும் அவன் கவியோசை கேட்டிடும்
பட்டென மனதில் தோன்றியதை
சட்டென உரைப்பவன்
இயற்கையை தூதனுப்பி
இன்பத்தை கண்டிடுவான்
தூங்கி கிடப்பவரை
தட்டி எழுப்பிடுவான
இடித்துத் திருத்தும் வலிமை
இவனுக்கு உண்டு
செடியின் வெற்றி
பூப்பதில்தான்
மண்ணின் வெற்றி
மழை பெறுவதில்தான்
வெற்றி என்பதோ
கவியின் கவியில்தான்

மேலும்

மிக்க மகிழ்ச்சி! நன்றி 20-Dec-2018 11:11 am
கவிஞணுக்கு அழகு கவிதை, கவிதைக்கு அழகு......? கவிஞன் தான். அருமை. 19-Dec-2018 8:45 pm
மிக்க நன்றி 15-Dec-2018 8:43 pm
மிகவும் அருமை அம்மா 15-Dec-2018 8:20 pm
Princess Hasini - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2018 9:34 pm

விடியலே!
விரைந்து வா.

உனது வெள்ளி
வீதியில்
தூசி விலகி
சுடர் பிறக்கட்டும்.

இந்த இதய
மண்ணிலே,
இளைய
தலைமுறையின்

உன்னத எழுச்சி
உதிக்கட்டும்.

உயரும் ஒரு கோடி
கரங்களிலே,

எழும் ஒளி
ஜோதியிலே,

இந்த உலகம்
உயர்ந்து,
உன்னதம் ஆகட்டும்..!!!

மேலும்

இன்னும் எழுத வாழ்த்துகிறேன்... 28-Mar-2019 7:55 am
அருமையான படைப்பு, ஒரு எழுச்சியின் சுடர் உங்கள் கவிதையில் ஒளிருகிறது... 28-Mar-2019 7:55 am
Princess Hasini - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2018 11:52 pm

மயக்கும் வெண்மதி அழகு.
மாலைநேர அவளின் வசீகரம் அழகு.
ஒளிந்துகொள்ளும் நாணம் அழகு.
ஓவியனின் கைவண்ணம் போன்ற கலையழகு.
என் கவிதை அவள் அழகைவிட அழகு.
வார்த்தை தந்த என்தமிழ் அவளைவிட அழகு.!

திரைகடல் சீறிப்பாய்வது அழகு.
திரவியம் தேடும் கப்பல்கள் பல சுமப்பதழகு.
நீலவண்ண நீரின் நிறையழகு.
நீங்கா அலைகளின் ஆராரோ அழகு.
உருவாக்கிய கரம் அவள் அழகைவிட அழகு.
அர்த்தமிக்க வரிகள் தரும் தமிழ் அவளைவிட அழகு.!

வானுயர் மலைகள் அழகு. வண்ண வண்ண
மலர்கள் தாங்கும் வளைவுகள் அழகு.
வெள்ளிக்கோடாக நீர் வீழ்ச்சிகள் அழகு.
வெய்யில் பட்டு மின்னுதல் காண மிக அழகு.
அரணாக கொண்டிருப்பது அவள் அழகைவிட அழகு.
உச்சரிக்க ஓச

மேலும்

Princess Hasini - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2018 11:19 pm

"நல்ல வேலை செஞ்சீங்க,
தொல்லை ஒழிந்தது"
முத்த மழை பொழிந்தாள்
தாரம் பள்ளியறையில்.

"என்ன தப்பு செஞ்சேன், இங்க
விட்டிட்டுப் போய்ட்டான்"
கண்ணீர் மழை சொரிந்தாள்
தாய், முதியோர் இல்லத்தில்.....

மேலும்

பாசமும் நேசமும் அற்றுப்போன உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எனது பதிவுகள். நன்றி நட்பே. 19-Dec-2018 8:07 pm
அருமையான பதிவு... விதி ஒன்றை செய்தான்! இவ்வினை தீரா உலகம்... 18-Dec-2018 5:54 pm
Princess Hasini - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2018 9:45 pm

பனிக்காற்றில் நான்
பரவசமானேன்,
நீர் மார்கழியாய்
இருந்தாய்.

வீதிப் பூக்களின்
மஞ்சள் பூவாக,
மத்தியிலிருந்தேன்.

நீ அதன் வெண்
கோடுகளானாய்.

மன்னனே! என்
மழலைகளின்
தகப்பனே!

மார்கழியும்,
மாக் கோடுகளும்,
இந்த மானுட
எல்லை வரை

இணைந்து
வருமானால்,
நம் உயிரும்,

உறவும், இதில்
உறைந்திருக்கும்....!

மேலும்

நன்றி நட்பே. உங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி. 29-Nov-2018 8:44 pm
அருமையான கவிதை இன்னும் பனித்துளிகளை சேகரிங்கள்! வாழ்த்துகள்! 28-Nov-2018 10:27 pm
Princess Hasini - Princess Hasini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2018 6:42 pm

கஜா என்னும் கருணையற்ற புயல்காற்றே
காரணமின்றி வந்தாயே, மண்ணில்
கண்ணீர் விதைத்துச் சென்றாயே.

ஐயோ என்மக்கள் அழுகின்றதே
மெய்யோ இதுவென்று மாள்கின்றதே.
வேதனை தீர வழியில்லையே
பாதகம் செய்துவிட்ட உன்செயலால்.

வருடங்களாய் வளர்த்த மரங்கள்
வெறும் உடம்பாக வீழ்ந்தனவே
கதிர் பிடித்த பயிர்த்தாள்களெல்லாம்
உதிர் மணியாக சாய்ந்தனவே.

உலகிற்கு உணவீந்த என் தகப்பன்மார்
ஒருவாய் சோற்றுக்கு கையேந்தி நிற்கிறாரே,
அடித்துக்கொண்டு அழவும் தெம்பில்லை,
பிடித்துக்கொண்டு நிற்கவும் மனை கொம்பில்லை.

உடனேயே எழுந்துகொள்ள முடியாதே,
முடிந்துபோன மாபெரும் இழப்பாலே.
ஆறுதல் சொல்லவும் வார்த்தையில்லை,
தேறுதல் கூறியு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

user photo

வலியவன்

பெங்களூரு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
priya

priya

கரூர்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

வேலனார்

வேலனார்

தமிழகம்
வாசு

வாசு

தமிழ்நாடு

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே