காலம் காலமாக
பனிக்காற்றில் நான்
பரவசமானேன்,
நீர் மார்கழியாய்
இருந்தாய்.
வீதிப் பூக்களின்
மஞ்சள் பூவாக,
மத்தியிலிருந்தேன்.
நீ அதன் வெண்
கோடுகளானாய்.
மன்னனே! என்
மழலைகளின்
தகப்பனே!
மார்கழியும்,
மாக் கோடுகளும்,
இந்த மானுட
எல்லை வரை
இணைந்து
வருமானால்,
நம் உயிரும்,
உறவும், இதில்
உறைந்திருக்கும்....!