தனித்தன்மை வாய்ந்தவள்

தனித்தன்மை வாய்ந்த பெண்ணே
ஒருமுறைதான் கண்டேன் உன்னை
தினம் பார்க்க தூண்டும் கண்ணே
என் மனம் காதலிக்குது உன்னை

சோம்பேறியாய் இருந்த என்னை
சுறுசுறுப்பூட்டவந்த நிலவே
எனக்கு பிடித்த பேரழகி நீதான் என்பேன்

மலர்ந்த மலரின் நறுமணம் போலே
விடாமல் சுற்றி வளைத்து வருகிறாயே
இன்னும் முடிசூடாத இராணியே
என்னை வாழ வைக்கும் தேவியே
நீதான் என்னுயிர் ஆவியே
எந்நாளும் உன் தரிசனம் எனக்கு தேவையே

கலை பிரியனாய் இருந்த என்னை
கலை வெறியனாய் மாற்றியவள் நீயே
மெய்யெது பொய்யெது என்று தெரியாமல்
நான் இன்று தவிக்கின்றேனே

உன் நீண்ட விழியால்
எனைத் தீண்டும் அழகியே
உன் அடர்ந்த புருவத்தை
வில்லென வளைத்து
என் மீது அம்பு எய்கிறாயே

எடுப்பான மூக்கில்
வைரத்தை கோர்த்து
மின் வெட்டும் நேரத்தில்
எனை சுட்டுப் போகிறாயே
உன் மின்சாரக் கண்ணாலே

கால மழைக் காற்றில்
தலைவிரித்தாடும் 
தென்னங்கீற்றாய்....
என் மனம் ஆடுதே!

மழை கொட்ட கொட்ட
நீர் சொட்ட சொட்ட
உடை நனைந்து கொண்டே
ஓர் வெண்ணிலா 
எனைக் கடந்து போகையில்
என் வாயில் நீர் ஊறுதே
விளைந்து நிற்கும்
மாம்பிஞ்சைக் கண்டாலே
அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்தபடியே
இன்ப வெள்ளத்தில் வீழ்ந்து போனேனே
காதல் கடலில் மிதக்கும் கப்பலாய்
தன் இலக்கை நோக்கி நகர்ந்தேனே
அக்கரையை அடைந்து
அவள் நெஞ்சில் மெதுவாய் படர்ந்தேனே
என் துணையாய் அவளை கரம்பிடித்தேனே!

எழுதியவர் : கிச்சாபாரதி (28-Nov-18, 9:02 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 577

மேலே