மரணத்தின் வாசலுக்கு

சொக்க வைத்த
அழகு நிலா

அசைந்தாடும் தேராய்
வீதி உலா

அவளைக் கண்ட
நாள் முதலா

பகலில் கூட கனா

மீண்டும் பார்பேனா
என்ற வினா

எனக்குள் தோணுதே
தானா!


மண்ணுக்குள் விழுந்த
விதையாய்

நீ உறங்காது என்
மனசுக்குள்ளே

உறக்கம் தொலைந்து
நானோ

இம்மண்ணின் மேலே
செய்வதறியாது

சோர்ந்து போனேன்

என்நிலை சொல்ல
துடித்து தோற்க


மெள்ள ஊர்ந்தேன்
மலை முகட்டிற்கு

முற்றுப் பெறட்டும்
இது என்று

பொட்டென்று ஒரு
சொட்டு முகத்தில்விழ

சட்டென்று கண்விழித்தேன்

பசி மயக்க கனவுக்காதல்!


முடிவு மட்டும் மாறாது

கனவிலும் காதல் கைபிடித்து
அழைத்ததே

மரணத்தின் வாசலுக்கு!

எழுதியவர் : நா.சேகர் (28-Nov-18, 11:08 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 330

மேலே