இப்படியும் ஓரு பதில்

என்னை ஆச்சரியமாக பார்ப்பவர்களுக்கு ஓர் விளக்கம்....
ஆம்!.எனக்கு விவாகமும் ஆகிவிட்டது...விவாகரத்தும் ஆகிவிட்டது...இதை கூற எனக்கு எவ்வித ஐய்யபாடும் தோன்றயதில்லை.
இங்கு அதிசயமும் , ஆச்சர்யமும் கொள்ளுமளவு ஏதும் நிகழ்ந்திருக்கவில்லையே..
எவரொருவர் விலக்குவதற்க்கு முன்பே விலகி இருப்பது எவ்வளவு உத்தமமோ அதே போல் விளக்கம் கேட்பதற்கு முன்னமே விளக்குவதும் நன்றே...
பொய்யுரைத்து ஓடி ஒளிந்து கொள்வதை காட்டிலும் மெய்யுரைத்து நேரெதிரிலே நிற்பதிலே எனக்கோர் அகமகிழ்வு..... எவரின் பரிதாப விருந்தையும் இவள் ஏற்பதில்லை......
என்னை பற்றிய தவறான புரிதலுக்கு நான் பொறுப்பல்லவே...

எழுதியவர் : ப்ரியா (24-Dec-18, 9:48 am)
பார்வை : 299

மேலே