கவிஞன் ஓர் காலக்கண்ணாடி

கவிஞன் என்பவன் ஓர்
காலக் கண்ணாடி
கருப்படு பொருளை
உருப்பட வைப்பவன்
கலங்கா உள்ளம் கொண்ட
கலங்கரை விளக்கு அவன்
ஆக்கல் அழித்தல் காத்தல்
அனைத்தையும் அறிந்தவன்
நிதர்சனத்தின் உண்மைதனை
நீக்கமற உரைப்பவன்
மிகையோ குறையோ
கிஞ்சித்தும் இல்லை
சாளரத்தின் காதுகளுக்கும் அவன் கவியோசை கேட்டிடும்
பட்டென மனதில் தோன்றியதை
சட்டென உரைப்பவன்
இயற்கையை தூதனுப்பி
இன்பத்தை கண்டிடுவான்
தூங்கி கிடப்பவரை
தட்டி எழுப்பிடுவான
இடித்துத் திருத்தும் வலிமை
இவனுக்கு உண்டு
செடியின் வெற்றி
பூப்பதில்தான்
மண்ணின் வெற்றி
மழை பெறுவதில்தான்
வெற்றி என்பதோ
கவியின் கவியில்தான்