வாகைசூடலாமே

வாகைசூடலாமே..!
15 / 07 / 2025

அது அது அதன்படி நடக்குமாறு
அது அது அதன்படி வகுத்தமாறு
அது அது அதன்படி நடந்தேறுமே
இது இது இதன்படி நடந்துவிடும்
இது இது இதன்படி கடந்துவிடும்
இது இது இதன்படி அமைவதுதான்
இயற்கையோ இறையோ போட்டுவைத்த
இடியாப்ப சிக்கலான வாழ்வதில்
எது எது எதன்படி நடந்தாலும்
எது எது எதன்படி கடந்தாலும்
இதுவோ அதுவோ எதுவோ
பொதுவாய் ஒத்து கொண்டு
சகித்து கொள்ள பழகிவிட்டால்
எதுவான போதும் வாகைசூடலாமே..!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (14-Jul-25, 8:24 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 21

மேலே