பாலாஜி காசிலிங்கம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலாஜி காசிலிங்கம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Jul-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2012
பார்த்தவர்கள்:  547
புள்ளி:  91

என்னைப் பற்றி...

நல்ல தமிழ் படைப்புகளை படிக்கவும் உருவாக்கவும் விரும்பும் கடைநிலை தமிழ் விரும்பிகளில் ஒருவன்...

என் படைப்புகள்
பாலாஜி காசிலிங்கம் செய்திகள்
பாலாஜி காசிலிங்கம் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2021 7:36 pm

தூய்மையான உள்ளம் கொண்டவள்
தூண போன்று எம்மை தாங்குபவள்
உன்னதமானவள் -எமக்கு என்றும்
உண்மையாய் இருப்பவள்
எண்ணில் அடங்கா எனக்காய் இன்முகத்துடன் ஏற்பவள்
இத்தனை போற்றுதலுக்கும் உரியவள் என் தாய்
நான் பேரின்பம் கொள்கிறேன்
எப்பொழுதெனில் - என்னால் அவள் முகத்தில் புன்னகை ஏற்படச் செய்யும் பொழுது
என்றும் உன் அரவணைப்பில் நான் தாயே

மேலும்

அம்மா. எப்போதும் நம்முடைய வர் 18-Jan-2021 3:09 pm
பாலாஜி காசிலிங்கம் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2021 7:03 pm

என்னுடைய இன்பமான பயணத்தில் சாலையோர மரங்களுக்கும் மகிழ்ச்சி போலும் புன்முறுவலுடன் பூதூவி வழியனுப்பிவைக்கின்றன ...

மேலும்

அருமை 18-Jan-2021 3:06 pm
பாலாஜி காசிலிங்கம் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2021 3:44 pm

அமைதியாக ரம்மியமாக துயில் கலைந்த காலம் மாறியது தோழிகளின் கூக்குரலாக வகைவகையாய் அறுசுவை நொறுக்கு தீனிகளையும் அலட்சியமாக பார்த்த காலங்களும் நெஞ்சினுள் பதிந்திருக்க
காய்ந்த சப்பாத்திக்கும் கரிகிய அப்பளத்திற்கும் தோழிகளுடன் சண்டையிட்டு உண்ணும் சுகம் அலாதியானது
காரணமில்லா சண்டைகள்
முடிந்த சில நொடிகளில் வயிறு வலிக்க சிறிப்பு
சிறந்த நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருப்பதும்
சிரிப்பு வராத நகைச்சுவைக்கு குலுக்கி சிரிப்பது இங்க எங்களோட வழக்கம்
அன்னை தந்தையிடம் அச்சதுடன் மறைப்பவை கூட
எதார்த்தமாய் எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படும்
எவருக்கும் இரத்த பந்தம் இல்லை ஆனால் ஒருத்தியின் காயம் எல்லோர் கண்

மேலும்

நல்ல நினைவுகள் 11-Jan-2021 5:35 pm
பாலாஜி காசிலிங்கம் - தீபிகா சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2021 3:44 pm

அமைதியாக ரம்மியமாக துயில் கலைந்த காலம் மாறியது தோழிகளின் கூக்குரலாக வகைவகையாய் அறுசுவை நொறுக்கு தீனிகளையும் அலட்சியமாக பார்த்த காலங்களும் நெஞ்சினுள் பதிந்திருக்க
காய்ந்த சப்பாத்திக்கும் கரிகிய அப்பளத்திற்கும் தோழிகளுடன் சண்டையிட்டு உண்ணும் சுகம் அலாதியானது
காரணமில்லா சண்டைகள்
முடிந்த சில நொடிகளில் வயிறு வலிக்க சிறிப்பு
சிறந்த நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருப்பதும்
சிரிப்பு வராத நகைச்சுவைக்கு குலுக்கி சிரிப்பது இங்க எங்களோட வழக்கம்
அன்னை தந்தையிடம் அச்சதுடன் மறைப்பவை கூட
எதார்த்தமாய் எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படும்
எவருக்கும் இரத்த பந்தம் இல்லை ஆனால் ஒருத்தியின் காயம் எல்லோர் கண்

மேலும்

நல்ல நினைவுகள் 11-Jan-2021 5:35 pm
பாலாஜி காசிலிங்கம் - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2021 7:06 pm

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்பது கவிமணி கூற்று
அவர் பெண்ணாக பிறந்திருந்தால் மறந்தும் கூறியிருக்க மாட்டார் இக்கூற்றை
பிறந்தவீட்டில் இளவரசியாகவும் தேவதையாகவும் வாழ்பவள்
புகுந்த வீட்டில் அடிமையாகவும் அகதியாகவம் மாற்றப்படுகிறாள்
தந்தையை மன்டியிட வைத்தவள்
தமயனை மன்றாடவிட்டவள்
புகுந்த வீட்டில் மன்டியிட்டும் மன்றாடியும் நிற்கிறாள்
கணவனிடம் கைகூப்பி நிற்கிறாள்
பிறந்த வீட்டின் பெருமை காக்க
ஈன்றோறை பார்பதற்கு கூட
இன்றுவந்தோரின் அனுமதி வேண்டி நிற்கிறாள்
பிறந்த வீட்டை பிரிந்த கணமே
முகமறியாதோரை உறவினராக ஏற்கிறாள்
இனி  வாழும் வாழ்க்கையை
அவளுக்காக அவள் வாழப்போவதில்

மேலும்

அருமை 09-Jan-2021 12:00 am
பாலாஜி காசிலிங்கம் - janani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2020 2:37 pm

ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!

மேலும்

அற்புதம் 14-Oct-2020 7:15 pm
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். பாராட்ட, குறை சொல்ல, என் தவறை திருத்த உங்களுக்கும் அனுமதிஉண்டு 13-Oct-2020 2:41 pm
பாலாஜி காசிலிங்கம் - Thilakavathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2020 11:59 am

பெண் குழந்தை

பெண் குழந்தை இல்லாமல் போனால்
இங்கு அவதாரம் நிகழ்ந்தத
அதிசயமும் நடக்காது
காதல் பிறக்காது
கவிதையும் பிறக்காது.....

மேலும்

பாலாஜி காசிலிங்கம் - kavi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2020 12:29 pm

நிலைக்கும் உறவைவிட
என்றும் நினைவில் இருப்பது
நட்பு மட்டுமே...!
-கவி...

மேலும்

பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2020 9:08 pm

உலகை அறிந்திடு..
உழைப்பை உணர்ந்திடு..
பசியை போக்கிடு..

நாளை நமக்காய்
இருக்கும்
என எண்ணிடு..!!!

மேலும்

பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2020 7:39 pm

வானும் மேகமும்
கொடுத்த கடன்..!!!

நிலமும் நீரும்
கொடுத்த கடன்..!!!

கடலும் கரையும்
கொடுத்த கடன்...!!!

நீயும்
உன்
நிழலும்
எனக்காக
கொடுத்த கடன்...!!!

என்ன அந்த கடன்?
எதற்கு அந்த கடன்?
யாரிடம் வாங்கிய கடன்?
யாருக்கு கொடுத்த கடன்?

காதலுக்காக கொடுத்த கடனோ..!!!
இல்லை இல்லை
உன்னுடனான
என்
நட்பிற்கான கடன்...!!!

யாரிடமும் வாங்கக்கூடிய
கடன்.
யாருக்கும் கொடுக்கக்கூடிய
கடன்..
அது
நட்பு மட்டும் தான் அன்றோ!!!!

மேலும்

நட்பு கடன் அல்ல. இறைவன் தந்த பரிசு. எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாழ்த்துக்கள் 02-Jul-2020 8:02 pm
பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2020 11:28 pm

என் மேல் உனக்கென்ன
கோபம்..!!!
நான் உன்னை உயிரென
நினைப்பதாலா..!!!

என்
உயிரும் நீ..
உடலும் நீ...
காதலும் நீதானடி..!!!

கண்ணே கனவில்
மட்டுமல்ல
கண்ணிமையிலும்
கருவிழியிலும்
நீ மட்டும் தானடி..!!!

மேலும்

பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2018 11:22 pm

கஜாவில் கலங்கிய மண்ணின்
மக்கள் முகம்...

மானிடராய் பிறந்து மண்ணில்
வாழும் கடவுள்
நமக்கு சோறிட்டு நம்மை
வாழ வைத்த மனித கடவுள்
உழவர்கள்...!!!
உணவுக்கும் உடைமைக்கும்
வடிக்கும் கண்ணீரில்...
உறங்கிட மறுத்து கலங்கிடும் நம்
கண்கள்...!!!

வெற்றியின் வழியில் விண்ணின்
விஞ்ஞானிகள் முகம்

பால்வெளியுடன்
காதலில் கரைந்து விண்ணில்
இருந்து மண்ணை காக்க
சென்ற செயற்கை கோள்...!!!
நம் மண்ணின் பெருமைகளை
அகில உலகமும்
அண்ணாந்து பார்க்கும்,..!!!

விண்ணை பார்த்து
பெருமை கொள்ளும் முன்னர்
நம் மண்ணை மதித்து
போற்றி
மனித கடவுள்களை
காத்திடுவோம்..!!!
கரம் கொடுங்கள் மக்களே..!!

மேலும்

இன்னும் எடுத்துச் சொல்வோம் நமது எண்ணங்களை. பசியின் வயிற்றுக்கு பாடுபட்டு உணவூட்டும் நம் பாரத தாய் பெற்றெடுத்த தலைமகன்களாம் விவசாய உறவுகளைக் காத்திடுவோம். அருமை நட்பே. தொடரட்டும் உங்களின் அழகிய பணி. 19-Dec-2018 8:20 pm
ஆம்....உண்மையான பதிவு...கரம் கொடுத்து கஜா புயலின் சுவடை அழிப்போம்.... 01-Dec-2018 5:15 am
மேலும்...
கருத்துகள்

மேலே