களைவோம் கஜாவின் கால் சுவடுகளை

கஜாவில் கலங்கிய மண்ணின்
மக்கள் முகம்...

மானிடராய் பிறந்து மண்ணில்
வாழும் கடவுள்
நமக்கு சோறிட்டு நம்மை
வாழ வைத்த மனித கடவுள்
உழவர்கள்...!!!
உணவுக்கும் உடைமைக்கும்
வடிக்கும் கண்ணீரில்...
உறங்கிட மறுத்து கலங்கிடும் நம்
கண்கள்...!!!

வெற்றியின் வழியில் விண்ணின்
விஞ்ஞானிகள் முகம்

பால்வெளியுடன்
காதலில் கரைந்து விண்ணில்
இருந்து மண்ணை காக்க
சென்ற செயற்கை கோள்...!!!
நம் மண்ணின் பெருமைகளை
அகில உலகமும்
அண்ணாந்து பார்க்கும்,..!!!

விண்ணை பார்த்து
பெருமை கொள்ளும் முன்னர்
நம் மண்ணை மதித்து
போற்றி
மனித கடவுள்களை
காத்திடுவோம்..!!!
கரம் கொடுங்கள் மக்களே..!!!
கஜாவின் கால் சுவடுகளை
களைவதற்கு...!!!

எழுதியவர் : (30-Nov-18, 11:22 pm)
பார்வை : 66

மேலே