விவாகரத்து

நாள் பார்த்தது
நட்சத்திரம் பார்த்தது
பொருத்தம் பார்த்தது
உறவுகள் பார்த்தது
மண்டபம் பார்த்தது
அருந்ததி பார்த்தது
இப்படி பார்த்து
பார்த்து செய்த
விவாகம்
விவகாரமாக
நாள் பார்க்கவில்லை
நேரம் பார்க்கவில்லை
பொறுத்து பார்க்கவில்லை
உறவுகளையும் பார்க்கவில்லை
மீண்டும் மன்றம் மட்டும் பார்த்தது
விவாக ரத்து கேட்டு வழக்காட..,