மன முறிவு
தூங்காமல் இருந்துவிட்டால்
விடியாதோ,
மறுநாளும் வாராதோ
என்றெண்ணி;
தாங்காமல் நீர்சொரிந்து
கண்ணில்,
சேராமல் விழித்திருந்து;
ஏமாற்றம் விடிந்ததும்
மனமுவந்து,
ஏறுபோல் நடைபழகி;
பிசையாது நாற்றம் தரும்
மார்கழியாய்,
புன்னகை தனை சுமந்து;
புதியதோர் பாதைத்தனை
ஏற்பதுமோர் பகுதி!