பூக்கள் விற்கவில்லை

பூக்கள் விற்கவில்லை
பூக்கூடையில் வாடிக் கொண்டிருந்தன
வீதியில் அரசியல்வாதிகள் அழைத்த
ஸ்ட்ரைக் பந்த்
மக்கள் ஒருவரும் வாங்க வரவில்லை
மாலையில் திறந்த சந்தையில்
கத்திரிக்காய் முதல் கருவாடு வரை
நொடியில் எல்லாம் விற்றுப்போயின
பூக்கள் விற்கவில்லை
கூடையில் சருகாகிக் கிடந்தன !

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Dec-18, 10:32 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 199

மேலே