தாலாட்டு

பொண்ணு ஓன்று
பிறந்து விட்டாள் இனி
மண்ணும் பொன்னும்
மங்காது உறங்காது
சீரோடு தாலாட்ட
சிட்டுப்போல் பட்டுப் போல்
செல்வமகள் வந்துதுதித்தாள்
ஆராரோ ஆரிரரோ ஆராரோ
கண்ணே என் கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ரோஜாவாம் செவ்விதழ்கள்
செக்க சிவந்த கன்னம்
பஞ்சு போல் மென்மையுடன்
பட்டு மேனி
பார்வையில் பரவசம்
பார்ப்போரை கொள்ளையிட
பாசமுடன்
பெற்றவரின் பேர் துலங்க
வந்துதுதித்தாள்
ஆராரோ ஆரிரரோ ஆராரோ
கண்ணே என் கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

பேணித்தான் போற்றித்தான்
வளர்ந்திட ஆராரோ பாடி
ஆசையுடன் அள்ளித்தான்,
அன்பில் கொள்ளத்தான் துயில்
ஆராரோ ஆரிரரோ ஆராரோ
கண்ணே என் கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

அதிஸ்ட தேவதையாய் அன்பாலே
ஆளவந்து பிறந்து விட்டால்
ஆட்சியும் அரிஅணையும்
பெற்றவர்கள் கரங்களிலே
தவழ்ந்து வந்து சேர்ந்திடுமே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ
கண்ணே என் கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Dec-18, 1:10 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : ponnu ontru
பார்வை : 86

மேலே