நினைத்துப் பார்க்கிறேன்

இனிப்பும், கசப்பும்,
நா தரும் சுவையே!
இன்பமும், துன்பமும்,
மனத்திடை நிகழ்வே!
பெய்யும், பொய்யும்,
வாய் மொழி உறவே!
நட்பும், பகையும்,
நாம் காட்டும் செயலே!
அன்பும், அறனும்,
பண்பின் உயரது வழியே!
பாசமும், நேசமும்,
மனதது காட்டும் வெளிப்பாடே!
வாழ்வும், வளமும்,
இறைவன் தரும் வரமே!
நாளும், கிழமையும்,
நல்லவர்களுக்கு என்றும் நன்றே!
நயமது புரிந்து, நல்லவை நினைத்து,
உண்மைக்கும், உரிமைக்கும் துணை நிற்போம்.