ட்ரம்ப் ஆட்சி

அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் நடக்கும் சில அதிர்ச்சி தரம் மாற்றங்கள் இங்கு சித்தரிக்கப்படுகின்றன:

ஏற்றுமதியாளர்: போன மாதம் நான் ஆயிரம் ரூபாய்க்கு அமெரிக்காவிற்கு ஏற்றுக்கதி என்று சொன்ன பொருள் விலை இப்போது என்ன?
ஏற்றுமதி வாங்கி: ஒன்றும் அதிகம் இல்லை, இரண்டாயிரம் ரூபாய் தான்.
ஏற்றுமதியாளர்: அமெரிக்க நம் நாட்டுப்பொருட்கள் மீது கூடுதலாக 34% இறக்குமதி கட்டணத்தை கூட்டிவிட்டதால் எங்க பாடு பெரும்பாடாகிவிட்டது. இனிமேல் எப்படி பொருட்களை அமெரிக்க ஏற்றுமதி செய்யமுடியும்னு தெரியவில்லை.
&&&
அமெரிக்கா விமானநிலையத்தில்: நீங்கள் எங்கள் நாட்டிற்கு கொண்டுவந்த பொருட்களுக்கு 100% கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.
சீனா ஏற்றுமதியாளர்: அரசாங்கம் வரி விதித்துத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட அநியாயமான, திமிரான கூடுதல் கட்டணங்களை விதிப்பதை உங்கள் ட்ரம்ப் ஆட்சியில்தான் பார்க்கிறேன். பாருங்க, உங்கள் நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு நாங்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்போகிறோம் என்று பாருங்கள்.
&&&
இந்திய விமான நிலையத்தில் ஒரு அமெரிக்க விமானம் வந்து இறங்குகிறது. அதிலிருந்து 300 பிரயாணிகள் இறங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் தக்க ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசித்துவந்ததால், அத்தனை பேர்களும் கைதிகள் போல, கையில் விலங்கிட்டு இட்டுச்சென்று இந்திய செல்லும் விமானத்தில் அமர்த்தப்பட்டனர். இவர்களை நம் நாட்டின் மானத்தையும் மரியாதையையும் குலைக்க அமெரிக்கா சென்றவர்கள்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (10-Apr-25, 9:38 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 20

மேலே