உண்மையை சொல்லி விடு மனமே

உண்மை சொல்வாய் மனமே /
உள்ளக் கிடங்கில் ஏற்றியவை கனக்கவில்லையோ ?
உணர்வால் கிடைத்த ஏமாற்றம்/
உண்மை அறிந்த பின்பு கிடைத்த ஏமாற்றம் ..../
உணர்ச்சிக்குள் வசப்பட்டு வந்த ஏமாற்றம்/
உள்ளத்தை அள்ளியவனின்
பிரிவினால் வந்த ஏமாற்றம் /
உறவுகள் கொடுத்த எத்தனையோ ஏமாற்றம்/
உரிய நேரத்தில் உணவு இன்றித் தவித்த ஏமாற்றம் ...../
உதவும் கரங்களை எதிர் பார்த்து வந்த ஏமாற்றம் /
உலுக்கிப் போட்ட சுனாமியினால்
உயிர் பலி கொடுத்து பெருந் துயர் கண்ட ஏமாற்றம்/
ஊர் விட்டு ஊர் அகதியாக அழையும்
போது வலியோடு பிறந்த ஏமாற்றம் ..../
தேசம் விட்டு தேசம் பணத்துக்காக /
புறப்பட்ட பின்பு பாசத்துக்காக ஏங்கித் தவிக்கும் ஏமாற்றம் /
கவலையின் பிடியில் நான் பிடி பட்டு/
கண்ணீர் சிந்தும் வேளை /
மனமே நீ அமைதி இழந்து துடித்தாயே /அதை சொல்லி விடுவாயோ ?என்னிடமே
இது போன்று எத்தனை சுமைகள் /
உன்னுள் உண்டு என உண்மைகளை
சொல்லி விடு என் மனமே.../