நன்மதி வெண்பா - நூல் - பாடல் 95
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
சாலிவிளை யாவூருந் தார்வேந்தில் லாவூருங்
கோலரசன் வாழாத கோவிலும் - மேலாந்
துணையின்றிச் சென்னெறியுந் தூநன் மதியே
பிணமெரியு மீமமெனப் பேசு! 95