புதுமை புரிந்திடும் புன்னகைப் பூவே

எதுகையும் மோனையும் என்னிடம் உண்டு
புதுமை புரிந்திடும் புன்னகைப் பூவே
எதுகைகள் மோனை இலக்கியம் பேச
பதுமையே புன்னகைபூப் பாய்
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
எதுகையும் மோனையும் என்னிடம் உண்டு
புதுமைசெய் புன்னகைப் பூவே --மதியே
எதுகைகள் மோனை இலக்கியம் பேச
பதுமையே புன்னகைபூப் பாய்
----ஒரு விகற்ப நேரிசை வெண்பா
எதுகை ---எது புது எது பது
மோனைகள்--
எ எ ----பொழிப்பு மோனை
பு பு பு பூ -----முற்று மோனை
எ இ ----பொழிப்பு மோனை
ப பு பா ----மோனை
மூன்றாம் சீரில் மோனை பொழிப்பு மோனை
நான்கு சீரிலும் மோனை அமைந்தால் முற்று மோனை