சிறையிட்ட நேசங்கள்

வீதி நோக்கும் விழி
விதியை சபிக்கும் மதி
விரக்தியோடு இந்தப் பெண் மதி
விரும்பியதனாலே துன்பமே பெறுமதி
நேசத்தின் வெகுமதி
பாசத்தோடு வளர்ந்த ரதி
நேசங்கள் சிறையிட்டதால்
பேச்சு இழந்தாள் சாரதி.
உள்ளத்தால் வளைத்தாய் பாதி
உதட்டால் உரைத்தாய் மீதி
உணர்ச்சி செய்ததோ சதி
சிறையிட்ட நேசங்கள் நிலைக்காமல் போனதோ தலை விதி.
நேசங்களிடம் சிறை பட்டால் நான்கு சுவருக்குள் வாழ்வதுதான் கெதி ..../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (1-Dec-18, 7:52 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 72

மேலே