காற்றிற்கு ஒரு தூது
காற்றிற்கு ஒரு தூது
காற்றே காற்றே வீசாமல் கொஞ்சம் நிற்பாய்
காதலனுடன் சேர எனக்கு ஒரு வழி வகுப்பாய்
கார்மேகத்தைத் தள்ளி நீ கொண்டு வந்தால்
காண்பவை அனைத்தும் காரிருளில் மூழ்கும்
கருமேகமும் நீயும் சேர்ந்து குளிரும் பொழுது
கடுமழையும் வந்து பார்ப்பவைகள் மறையும்
கண் மறைந்து காரிருளில் நான் காதலனைத் தேட
காலமும் கடந்திடும் அவனை காண்பதும் தடைபடும்
கருணை கொண்டு செவி மடுப்பாய் கொஞ்சம் நின்று
ஒரு சிறிது காலம் கழித்து பின்னால் வருவாய்
என் காதலனை நான் காண உதவி புரிவாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
