கனவை விரிக்குது காதல் நிலாதன் களிப்புடனே - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
மனந்தனில் உள்ளெழும் மௌனப் பொழிவில் மயங்கிநின்றேன்;
நினைவதன் நீரலை நெஞ்சினில் பாடுது நேசமென;
புனையுது புன்னகை போற்றும் இதழ்கள் புதுக்கவிதை;
கனவை விரிக்குது காதல் நிலாதன் களிப்புடனே!
- வ.க.கன்னியப்பன்