கல்பனா பாரதி - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கல்பனா பாரதி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Mar-2013
பார்த்தவர்கள்:  4039
புள்ளி:  2193

என்னைப் பற்றி...

கவிதை எனது முகவரி
முறுக்கு மீசை புரட்சிக்காரன்
பாரதி என் ஆதரிசக் கவிஞன் .
அவன் கற்பனை நான் தொட நினைக்கும் வானம்
ஆதலினால் நான் கல்பனா பாரதி .
பாரதியும் பாரதி தாசனும் என் ஆதரிச கவிஞர்கள்
அன்னை வித்யா பாரதி நான் வணங்கும் தேவி .

என் படைப்புகள்
கல்பனா பாரதி செய்திகள்
கல்பனா பாரதி - கல்பனா பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2021 4:07 pm

மின்னல்
விழியிலோ
வீணை
இதழிலோ
புன்னகை
பனித்துளி சிதறிய பூவோ
பார்வை
கவிதை எழுதும் காதல் புத்தகமோ ?

மேலும்

கல்பனா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2021 4:07 pm

மின்னல்
விழியிலோ
வீணை
இதழிலோ
புன்னகை
பனித்துளி சிதறிய பூவோ
பார்வை
கவிதை எழுதும் காதல் புத்தகமோ ?

மேலும்

கல்பனா பாரதி - கல்பனா பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2021 3:53 pm

வாசலில் நீ
---- தென்றலாய் வருவாயானால்
வழியெல்லாம் ரோஜா இதழ்களைத் தூவுவேன்
முத்துக்களை நீ
----உன் இதழ்களில் ஏந்தி வந்தால்
என் கவிதைப் புத்தகத்தில் அதை கோர்த்து வைப்பேன்
கனவு விழிகளை நீ
---- மெல்ல அசைத்தால்
நான் கற்பனை வானில் சிறகு விரித்துப் பறப்பேன்
என்னில் நீ
---- காதலில் விழுந்து விட்டால்
பின் என்ன உன் மூச்சோடு மூச்சாக நான் கலந்துவிடுவேன் !

மேலும்

கல்பனா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2021 3:53 pm

வாசலில் நீ
---- தென்றலாய் வருவாயானால்
வழியெல்லாம் ரோஜா இதழ்களைத் தூவுவேன்
முத்துக்களை நீ
----உன் இதழ்களில் ஏந்தி வந்தால்
என் கவிதைப் புத்தகத்தில் அதை கோர்த்து வைப்பேன்
கனவு விழிகளை நீ
---- மெல்ல அசைத்தால்
நான் கற்பனை வானில் சிறகு விரித்துப் பறப்பேன்
என்னில் நீ
---- காதலில் விழுந்து விட்டால்
பின் என்ன உன் மூச்சோடு மூச்சாக நான் கலந்துவிடுவேன் !

மேலும்

கல்பனா பாரதி - கல்பனா பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2021 10:35 pm

புல் நுனியில்
ஒரு வெண்பனித்துளி
அது ஒரு வெண்பா என்றான்
யாப்புக் கவிஞன்
அது ஒரு ஹைக்கூ என்றான்
ஜப்பானிய கவிஞன்
அது பனி புல்லில் எழுதிய ஓவியம்
என்றான் தூரிகைக்காரன்
நன்றாகத்தான் இருக்கிறது எல்லாம் ஆனால்
அவள் மெல்லிதழ் சிறிது திறக்கும்போது
இதழோரத்தில் பளிச்சிடும் புன்னகை முத்தின்
பிரதிபலிப்பு என்பேன் நான் !

மேலும்

கல்பனா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2021 10:35 pm

புல் நுனியில்
ஒரு வெண்பனித்துளி
அது ஒரு வெண்பா என்றான்
யாப்புக் கவிஞன்
அது ஒரு ஹைக்கூ என்றான்
ஜப்பானிய கவிஞன்
அது பனி புல்லில் எழுதிய ஓவியம்
என்றான் தூரிகைக்காரன்
நன்றாகத்தான் இருக்கிறது எல்லாம் ஆனால்
அவள் மெல்லிதழ் சிறிது திறக்கும்போது
இதழோரத்தில் பளிச்சிடும் புன்னகை முத்தின்
பிரதிபலிப்பு என்பேன் நான் !

மேலும்

கல்பனா பாரதி - கல்பனா பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2021 10:29 am

பொய்க்கு ஒப்பனை செய்தால்
கவிதை
கவிதையில் சிறந்தவன்
கம்பனா
பாரதியா
கற்பனையில் உயர்ந்து நிற்பவன்
எவனோ அவனே கவிஞன்
அதில்
கம்பன் என்ன
பாரதி என்ன
நீ என்ன
நானென்ன ?

மேலும்

கல்பனா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2021 10:29 am

பொய்க்கு ஒப்பனை செய்தால்
கவிதை
கவிதையில் சிறந்தவன்
கம்பனா
பாரதியா
கற்பனையில் உயர்ந்து நிற்பவன்
எவனோ அவனே கவிஞன்
அதில்
கம்பன் என்ன
பாரதி என்ன
நீ என்ன
நானென்ன ?

மேலும்

கல்பனா பாரதி - சுதாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2021 7:44 pm

இதயத்தில் ஒரு பாரம் எனோ உருவானது!

விழிகளில் உலவியவள்,
விடுகதை போட்டு சென்றவள்!
கண்ணார காதல் சொன்னவள்!
காற்றோடு கலந்து போனாள்!

காலங்கள் கரைந்தாலும்
கரையாமல் உன் நினைவுகள்!

மனசுக்குள் கட்டிவைத்தேன்
மஞ்சள் நிற தாஜ்மஹால்!

மாலை வேளையில் மகரந்தம் பூசி வந்த நிலவே
மனமேடை ஏன் வர மறுத்தாய்!

மருதானி வர்ணமாய் மறைந்து போனாய்!

தேய்பிறை நிலவாய் என்னை பிரிந்து சென்றாய்!

நீயற்ற வானில் தொலைந்து போனேன் கரும்புள்ளியாய்!

மேலும்

மன உணர்வின் சோகமான வெளியீடு 08-Jun-2021 9:27 pm
கல்பனா பாரதி - சுதாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2021 11:45 am

கண்ணாடியில் உன் பிம்பம் பட்டு சில்லாகி போனது!

கார்மேக குழல் மோதி சூறாவளி என்னுள் வந்தது!

பூக்கள் எல்லாம் கூடி நின்று புது வண்ணம் தேடியது!

மூச்சு காற்று பட்டு என் வீட்டு புல்லாங்குழல் நாதம் இசைத்தது!

அசை போடும் ஆடாக அன்பே என் மனசு ஆனது!

எல்லாம் நடந்து போனது!

ஏதும் அறியாதவளாய் என் மனை பக்கம் நீ வந்து போன வேளையில்!

மேலும்

👍நன்றி அன்பரே👍 08-Jun-2021 9:27 pm
மூச்சு காற்று பட்டு என் வீட்டு புல்லாங்குழல் நாதம் இசைத்தது! கற்பனை அழகு 08-Jun-2021 9:25 pm
கல்பனா பாரதி - சுதாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2021 10:27 pm

கனவில் தினமும் வருகிறாய்!
கவிதை பல படிக்கிறாய்!
இரவு முழுவதும் என்னை தாலாட்டுகிறாய்!
வழியில் விண்மீன் கோலம் போடுகிறாய்!
வழியெங்கும் வானவில்லை நட்டுவைக்கிறாய்!
முகவரி கேட்டால் மௌனமாகிறாய்!
முத்தம் கேட்டால் மலரை தருகிறாய்!
விடியும் வரை காத்திருக்க மறுக்கிறாய்!
சூரியன் வரும் முன்னே சொல்லாமல் செல்கிறாய்!
போதுமடி உன் விளையாட்டு!
விழி முடி காத்திருக்கிறேன்!
விடியலில் என் வீட்டு வாசலில் கோலம் போட வந்து விடு!

மேலும்

🙏,நன்றி அன்பரே👍 08-Jun-2021 10:06 pm
முகவரி கேட்டால் மௌனமாகிறாய்! முத்தம் கேட்டால் மலரை தருகிறாய்! கனவுப்பெண் இனிமை 08-Jun-2021 9:22 pm
நன்றி அன்பரே! 07-Jun-2021 5:52 pm
வணக்கம் சுதாவி அவர்களே... கனவுகளும், கற்பனைகளும் என்றும் சுகமே.... நிஜத்தில்தான், சில இடங்களில் சிலரிடம் கருத்து மோதல்கள் வருகின்றது... வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!!! 07-Jun-2021 5:02 pm
கல்பனா பாரதி - கல்பனா பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2021 10:13 pm

முள் குத்திவிடும் என்று
ஜாக்கிரதையாய்த்தான்
ரோஜா மலர்ந்தது
ஆனால்
அவள் மலரைப் பறிக்கும் போது
அவள் விரலை முள் குத்திவிட
என்னினும் மென்மையான
இவள் மெல்லிய விரலை
முள் குத்திவிட்டதே
என்று ரோஜா வருந்தியது
மன்னிப்பும் கேட்டுக்கொண்டது !

மேலும்

நன்றி சுதா வி அவர்களே 08-Jun-2021 9:16 pm
மெல்லிய விரலை முள் குத்திவிட்டதே என்று ரோஜா வருந்தியது மன்னிப்பும் கேட்டுக்கொண்டது ! நல்ல கற்பனை! 08-Jun-2021 8:32 pm
நன்றி கோவை சுபா அவர்களே வாழ்த்துக்கும் இன்னும் ஒரு முறை நன்றி 08-Jun-2021 6:54 pm
வணக்கம் கல்பனா பாரதி அவர்களே... தங்களின் கவிதை வரிகள் ரோஜா இதழின் மென்மையை காட்டிலும் மிக மென்மை.. நல்ல கற்பனை...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 08-Jun-2021 6:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (183)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (183)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Karthik.M.R

Karthik.M.R

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (183)

sarabass

sarabass

trichy
muralimanoj

muralimanoj

கோவை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே