ஸ்ரீதேவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீதேவி
இடம்:  Coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Aug-2018
பார்த்தவர்கள்:  361
புள்ளி:  39

என் படைப்புகள்
ஸ்ரீதேவி செய்திகள்
ஸ்ரீதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2022 6:35 pm

என் விழிகள்
அதிகம் நேசித்ததும் ரசித்தும்
என்னைத்தான்
உன்னை காணும் வரை

இப்போது
என்னை தவிர
ரசிக தெரியாத என் விழித்திரையில்
சிறு ஒளியாய் வந்து மெல்ல மெல்ல
முழுமை அடைத்த உன் உருவம்
என்னை கரைத்து உன்னை பதித்துவிட்டது

இருவராய் பார்க்க தொடங்கியது
விழிகளா
அதை கட்ட தொடங்கிய
என் வீட்டு கண்ணாடியா
தெரியவில்லை வெட்கத்தில்

என் தூக்கம் தேடுவது
தலையணை அல்ல
உன் மடியணையை தான்

கிடைக்குமா அன்பே

மேலும்

ஸ்ரீதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2022 2:34 pm

பிறகு
கரைந்து விட்டது
ஆயிரம் நிமிடங்கள்

இருந்தும்
காத்திருக்கிறது மனம்
மன்னவ
என்னருகில் நின்ற நிமிடங்களுக்காக
மீண்டும் வராதோ என்று

மேலும்

ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2022 3:58 pm

மழை சாரல் ஜன்னல் வெளியில்
சூடான தேநீர் கையில்

லேசாக வருடிய குளிர்ந்த காற்று
அதில் கலந்து வந்த உன் மேனி வாசனை

அணைக்கமாட்டாயோ
ஏக்கத்தில் விழி மூட கரைந்த
மணித்துளிகள் எத்தனையோ

இருந்தும்
சுவைத்தது
குளிர்ந்த தேநீர்
உன் நினைவு கலந்ததால்

மேலும்

நன்றி கல்பனா பாரதி அவர்களே 05-Aug-2022 1:24 pm
நன்றி ஆரோ சகோதரரே 05-Aug-2022 1:18 pm
நன்றி கல்பனா 05-Aug-2022 1:17 pm
லேசாக வருடிய குளிர்ந்த காற்று அதில் கலந்து வந்த உன் மேனி வாசனை -------காதலின் ஏக்கம் சங்கத் தமிழ் வாசம் 04-Aug-2022 10:05 pm
ஸ்ரீதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2022 3:58 pm

மழை சாரல் ஜன்னல் வெளியில்
சூடான தேநீர் கையில்

லேசாக வருடிய குளிர்ந்த காற்று
அதில் கலந்து வந்த உன் மேனி வாசனை

அணைக்கமாட்டாயோ
ஏக்கத்தில் விழி மூட கரைந்த
மணித்துளிகள் எத்தனையோ

இருந்தும்
சுவைத்தது
குளிர்ந்த தேநீர்
உன் நினைவு கலந்ததால்

மேலும்

நன்றி கல்பனா பாரதி அவர்களே 05-Aug-2022 1:24 pm
நன்றி ஆரோ சகோதரரே 05-Aug-2022 1:18 pm
நன்றி கல்பனா 05-Aug-2022 1:17 pm
லேசாக வருடிய குளிர்ந்த காற்று அதில் கலந்து வந்த உன் மேனி வாசனை -------காதலின் ஏக்கம் சங்கத் தமிழ் வாசம் 04-Aug-2022 10:05 pm
ஸ்ரீதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2022 5:15 pm

எத்தனை ஆயுள் தண்டனை
கொடுத்தாலும்
ஏற்றுகொள்வேன்

உன் இதயம் சிறை என்றால்

மேலும்

ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2019 4:35 pm

நீ நடந்த பாதை
கடந்த காலமானாலும்

அறியாமல்
தேடுகிறது விழிகள்
இன்றும்
உன் பாத சுவடுகளை

மேலும்

நன்றி uma madam, நன்றி balu Sir 23-Nov-2019 5:13 pm
அருமை 22-Nov-2019 11:40 pm
அருமை 22-Nov-2019 4:15 pm
நன்றி நன்றி நன்றி நன்றி 22-Nov-2019 10:30 am
ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2019 4:03 pm

என்னை கடப்பது நீதானா
ஒவ்வொரு வாகனத்தை தேடுகிறேன்

அழைப்பது நீதானா
ஒவ்வொரு அலைபேசி அழைப்பையும் ஏற்கிறேன்

நினைப்பது நீதானா
விக்கலையும் நிறுத்த மறுக்கிறேன்

என்னையே அறியாமல் தேடுகிறேன்
என் கவிதை நீ, வருவாயா

மேலும்

தங்களுடைய கருத்துக்களே கவிதை போல் உள்ளது .நன்றி 24-Jul-2019 1:20 pm
மனம் விரும்பிய ஒருவர் கானலைப் போலே தான் தெரிவார் எங்கும் நினைவாக. தொட்டு விடும் தூரத்தில் இருந்தாலும் விழிகளுக்கு மட்டுமே ஏமாற்றம் நினைவுகளுக்கும் நிஜத்திற்கும் அல்ல...... (உங்கள் ஏக்கம் அழகு) 21-Jul-2019 11:02 am
நன்றி, தங்களின் கருத்து என்னை எழுத துண்டிக்கிறது 19-Jul-2019 4:33 pm
தேடல் முடியும் வரை யாவும் சுகமே நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Jul-2019 12:56 pm
ஸ்ரீதேவி - Revathy S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2019 1:04 am

காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை

மேலும்

மிக்க நன்றி! 23-Apr-2019 4:13 pm
அருமையான வரிகள்... கைகள் பேசுமென அறியவில்லை உன் கைகள் என் கை பிடிக்கும் வரை 22-Apr-2019 9:42 pm
வாழ்த்துகள் 20-Apr-2019 7:07 pm
மிக்க நன்றி! 20-Apr-2019 5:46 pm
ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2019 6:44 pm

மனம் சிறகடிக்க தொங்கியது
உன் விழி பாதை காட்டியது

என் ஒவ்வொரு அணுவும்
பூக்கத்தொடங்கியது
உன் இதழ் மணம் சேர்த்தது

வனவில்லையே வளைக்க
தூண்டியது - நம் கைரேகை
சந்தித்தபோது


அனைத்து மயக்கமும்
நிஜம் ஆனது

உன்னுடன் நடை பயணத்தில்

மேலும்

ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2019 12:44 pm

சூரியனின் பயணத்தை
கணித்து நேரம் பார்த்து
பொங்கலிட்டு
நன்றி சொன்ன மனமே

உழுத வலியையும் மறந்து
தனக்கு துணை நின்ற
மாடுகளை கையெடுத்து
கும்பிட்ட மனமே

துள்ளி குதிக்கும் காளைக்கு
வலிக்காமல் அடக்கி அணைத்த
தமிழ் (மணமே ) மனமே

உன்னை கொஞ்சம் கொஞ்சமாக
மருத்துவமனைக்கு
அழைத்து சென்ற நெகிழியை (பிளாஸ்டிக்)
கைவிட ஏன் அரசாணைவரை
காத்திருந்தாய்

மேலும்

ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2019 12:04 pm

வானம் பார்த்த பூமியும்
காத்திருக்குது
மழைக்கு அல்ல
மன்னவ உன் காலடிக்கு

முத்தமிழும் ஏங்கி நிக்குது
கண்ணாளனே
உன் விழி ஜடையை
மொழிபெயர்க்க

என் இதயம் கூட
ஏந்த துடிக்குது
காதலனே
உன் சிரிப்பு (பூ)களை

மேலும்

பிழை நீக்க முடிவில்லை 22-Jan-2019 2:01 pm
கொஞ்சம் பிழை நீக்கி எழுதினால்.. கொஞ்சும் கவிதை....! 22-Jan-2019 11:50 am
நன்றி நண்பரே 17-Jan-2019 1:08 pm
அருமையான வரிகள் "மழைக்கு அல்ல மன்னவா உன் காலடிக்கு" 17-Jan-2019 12:03 pm
ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2019 3:27 pm

சிறகு இருந்தால் பறந்திருக்கலாம்
மணம் இருந்தால் பூத்திருக்கலாம்
சுவை இருந்தால் கனியாய் இருக்கலாம்
துடுப்பிருந்தால் நீந்தியிருக்கலாம்
வளர்ந்திருந்தால் வானத்தை தொட்டிருக்கலாம்

அவ்வாறு
எண்ணாதே மனமே
உன் எண்ணத்தின் வேருக்கு
ஆசை என்னும் நீர் உற்று

அது மரமாய் வளர்ந்து
உன் முகவரியை முகநூலில்
பதிவேற்றும்

உலகம் உன்னை பாடம் படிக்கும்
நீ எடுத்துக்கடாவாய்
நீ சுற்றிய உலகம்
உன்னை சுற்றும்

அதற்க்கு
உன் வாழ்கை வட்டத்தை
பெரிதாக்கு

அதில்
உன் எண்ணத்தை
புதிப்பித்து கொள்

உன் ஆசைகளுக்கு
பாதை அமைத்து கொள்

பிறகு பார்
நீ யார்ரென்று
உலகம், உனக்கு சொல்லும்

ஒன்றை உணர்ந்

மேலும்

நன்றி நண்பரே 11-Jan-2019 1:01 pm
நன்றாய் எழுதியுள்ளீர் சிறப்பு. மேலும் வளமாக சிந்தியுங்கள். 10-Jan-2019 4:59 pm
மேலும்...
கருத்துகள்

மேலே