இருந்தும் சுவைக்கிறது
மழை சாரல் ஜன்னல் வெளியில்
சூடான தேநீர் கையில்
லேசாக வருடிய குளிர்ந்த காற்று
அதில் கலந்து வந்த உன் மேனி வாசனை
அணைக்கமாட்டாயோ
ஏக்கத்தில் விழி மூட கரைந்த
மணித்துளிகள் எத்தனையோ
இருந்தும்
சுவைத்தது
குளிர்ந்த தேநீர்
உன் நினைவு கலந்ததால்