மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூ - முத்தொள்ளாயிரம் 47
நேரிசை வெண்பா
மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே
வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை அகம்! 47
- முத்தொள்ளாயிரம், சோழன்
பொருளுரை:
கிள்ளி காலையில் பூமாலை சூடிக்கொண்டு உலா வருகிறான். காலையிலேயே வானவில் போட்டுக் கொண்டிருக்கும் வானம் போல் அவன் தோன்றுகிறான்.
மாலையில் அவன் கழற்றி எறிந்த பூவை விலைக்கு விற்கின்றனர். அவன் மாலையை அதிகம் பேர் விரும்பினார்கள் என்பதற்காக விற்கின்றனர்.
மாலையில் விற்கும் வெற்று மாலையால் என்ன பயன்? – அவள் கேட்கிறாள்.
பொற்பார் உறந்தை = பொன் விளையும் மண் கொண்ட உறையூர்

