பாப்புனை நெறியினில் பணிவுடன் நிற்பேன் - கலிவிருத்தம்

கலிவிருத்தம் யார் வேண்டுமானாலும் எழுதலாம்!

ஆனால் நான்கடிகளிலும் சீரொழுங்கு வேண்டும்;
வாய்பாடின்படி எழுத வேண்டும்.
1, 3 சீர்களில் பொழிப்பு மோனை வேண்டும்.
கண்டபடி வகையுளி செய்யலாகாது.
கண்டிப்பாகப் பாடலில் பொருள் இருக்க வேண்டும்.

கலிவிருத்தம்
(கூவிளம் கருவிளம் கருவிளம் தேமா)

காப்பியக் கலித்துறை கனிந்தவோர் பாடல்;
கூப்பிடுங் குரலினில் குயிலிசை ஆகும்!
யாப்பசை தவறிடில் இனிதெனல் ஆமோ?
பாப்புனை நெறியினில் பணிவுடன் நிற்பேன்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-22, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே