தமிழா உன் மனம்

சூரியனின் பயணத்தை
கணித்து நேரம் பார்த்து
பொங்கலிட்டு
நன்றி சொன்ன மனமே

உழுத வலியையும் மறந்து
தனக்கு துணை நின்ற
மாடுகளை கையெடுத்து
கும்பிட்ட மனமே

துள்ளி குதிக்கும் காளைக்கு
வலிக்காமல் அடக்கி அணைத்த
தமிழ் (மணமே ) மனமே

உன்னை கொஞ்சம் கொஞ்சமாக
மருத்துவமனைக்கு
அழைத்து சென்ற நெகிழியை (பிளாஸ்டிக்)
கைவிட ஏன் அரசாணைவரை
காத்திருந்தாய்

எழுதியவர் : devikutty (16-Jan-19, 12:44 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : thamila un manam
பார்வை : 88

மேலே