உன்னோடு நான்
காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை